நிறைவடைந்தது அயலான் திரைப்படம் !!

0
22

கடைசியாக சிவகார்த்திகேயன் PS மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்தார். மிகவும் பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் படக்குழுவினர் நினைத்த அளவிற்கு லாபம் ஈட்டவில்லை என்றே தான் சொல்லவேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன் ராம்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் ஒப்பந்தமானார் சிவா. படம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆனா நிலையில் ஒருவழியாக படம் எடுத்து முடித்துவிட்டனர்.

அயலான் திரைப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார், AR ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். படம் ஏலியன் குறித்த கதைக்களத்தை கொண்டிருக்கிறது. படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் நிறைய உள்ளதால், போஸ்ட் பணிகளை சீக்கிரமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். படம் இந்த வருடம் இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் டாக்டர் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. தற்போது அயலான் படப்பிடிப்பு தலத்தில் வெளியான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here