இது இப்போதைக்கு முடியுற கதை இல்ல .. வலுக்கும் இந்தியன் 2 பிரச்சனை !!

0
18

இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைக்கா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது என்பது தெரிந்ததே.

S. Shankar - Wikipedia

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது வேறு படங்களை இயக்கக் கூடாது என ஷங்கருக்கு தடை விதிக்க முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்குனர் தரப்பில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம் என்றும் அறிவுறுத்தியது.

Director Shankar praises Sillukarupatti | Tamil Movie News - Times of India

இதனை அடுத்து ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தினர் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக ஷங்கர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜூன் முதல் அக்டோபர் மாதத்திற்குள் ’இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக தான் தெரிவித்ததாகவும், ஆனால் ஜூன் மாதத்திலேயே படத்தை முடிக்க தயாரிப்பு தரப்பு வலியுறுத்துவதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும் ஷங்கர் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் ஜூன் மாதம் விசாரணைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lyca Productions - Wikipedia
Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here