ராதிகா கணவராக நடித்தவர் கோமா நிலையில் உள்ளார் !!

0
170

ராதிகா நடித்த பிரபலமான தொலைக்காட்சி தொடர் ’வாணி ராணி’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தொடரில் ராதிகாவுக்கு கணவராக நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் சிவாஜி கணேசன் நடித்த ’படிக்காத பண்ணையார்’ கமல்ஹாசன் நடித்த ’அந்த ஒரு நிமிடம்’ மணிரத்தினம் இயக்கிய ’பகல் நிலவு’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் வேணு அரவிந்த் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டத இதனையடுத்து அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் திடீரென கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை அடுத்து நடிகர் வேணு அரவிந்த் விரைவில் குணமாக வேண்டும் என்று சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here