இந்தியாவின் உள்ள எக்ஸ் தளத்தின் சிறந்த ஹேஸ்டாக்குகள் : ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – புதிய சாதனைகளை நிகழ்த்துவதிலும், பல சாதனைகளை முறியடிப்பதிலும் ஏனைய நட்சத்திர நடிகர்களில் தனித்து நிற்கிறார். அவருடைய பிரத்யேகமான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் காரணமாக.. பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடிப்பதுடன், இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகளவில் அவருடைய திரைப்படத்தை ரசிகர்களுக்காக கொண்டு செல்வதிலும் தனித்துவத்தை பின்பற்றுகிறார். ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – தெலுங்கு திரையுலகின் வணிக எல்லையிலிருந்து பான் இந்திய அளவிலான சந்தையின் நட்சத்திர ஐகானாக உயர்ந்திருக்கிறார். ட்விட்டர் இந்தியா நிறுவனம்…

Read More

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தினை தயாரித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியை உங்கள் நாட்குறிப்பில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த அதிரடி களியாட்டம் பெரிய திரைகளை ஒளிர செய்யும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ‘சலார் –…

Read More

பிரபாஸ் தொடங்கி வைத்திருக்கும் சமையல் குறிப்பு சவால்

முன்னணி நட்சத்திர நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சமையல் கலை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் புதுமையான முயற்சியாக #சமையல் குறிப்பு சவால் ஒன்றை அப்படத்தின் நாயகியான அனுஷ்கா முன்னெடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனக்கு பிடித்த உணவினையும், அதற்கான செய்முறை குறிப்பையும் பகிர்ந்து கொண்டு, இந்த சவாலை அனைவரும் பின் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த…

Read More

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்

அண்மையில் புகழ்பெற்ற இயக்குநரான மாருதி, நடிகை நிதி அகர்வாலுக்கு ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என ட்வீட்டரில் தெரிவித்தார். ஆச்சரியமான மற்றும் மகிழ்ச்சிகரமான இந்நிகழ்வால் ட்விட்டர் சமூக வலைதளம் பரபரப்பானது. பல்வேறு தரப்பினர் இது தொடர்பாக பல விசயங்களை முன் வைத்தனர். மேலும் மாருதியின் டிவிட் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு ‘ராஜா டீலக்ஸ்’ எனும் படத்தில் நடிகை நிதி அகர்வால் கதையின் நாயகியாக நடிக்கிறார் என்றும், அவர் நட்சத்திர நடிகரான பிரபாஸுடன் திரையை பகிர்ந்து கொள்கிறார் என்றும்,…

Read More

சான் டியாகோவில் நடக்கும் காமிக்-கானில் ப்ராஜெக்ட் கேயின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்காக பிரபாஸ், ராணா டகுபதி அமெரிக்கா சென்றுள்ளனர்

“ரெபெல் ஸ்டார்” பிரபாஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகப் படமான ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் கிலிம்ப்ஸ்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பும் காட்சியும் ஜூலை 20 அன்று சான் டியாகோ காமிக்-கான் (SDCC) 2023 இல் வெளியிடப்படும். படத்தின் முக்கிய காட்சியை வெளியிடவும், மேலும் ப்ராஜெக்ட் கே என்றால் என்ன என்பதை வெளிப்படுத்தவும் படக்குழு காத்திருக்கிறது. இப்போது, சான் டியாகோவில் உள்ள காமிக்-கானில் ப்ராஜெக்ட்…

Read More

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்-ன் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் 1 : சீஸ் ஃபயர் படத்தின் பிரமிப்பான டீசர் வெளியானது

நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசர் அதிகாலை 5 12 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை படக்குழுவினர் தூண்டினர். மேலும் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் புகழ்பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் உருவாக்கிய பரந்த பிரபஞ்சத்தின் பரபரப்பான செயல்பாடுகளின் காட்சிகளை இந்த டீசர் வழங்குகிறது. முன்னணி கதாபாத்திரத்தின் சக்தி…

Read More

ஆதிபுருஷ் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆதிபுருஷ் கதை ராகவ் மனைவியான ஜானகியை பத்துதலை கொண்ட அரக்கனான லங்கேஷ் கடத்திக்கொண்டு அவரின் இடத்திற்கு போய்விடுகிறார், தனது மனைவியை காப்பாற்ற அனுமன் மற்றும் பலரின் உதவிகளை கொண்டு ராகவ், லங்கேஷ் இடத்திற்கு சென்று அவரை வீழ்த்தி தனது மனைவி ஜானகியை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை… Read Also: Erumbu Movie Review இந்த கதையினை இயக்குனர் ஓம் ராவுத் வால்மீகியின் ராமாயணத்தை தழுவி , சற்று கமர்ஷியலாக எடுத்துள்ளார்….

Read More

மாதா வைஷ்ணவி தேவி ஆலயத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய ‘ஆதி புருஷ்’ படக் குழு

தயாரிப்பாளர் பூஷன் குமார்- இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் கூட்டணியில் தயாராகியிருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தின் பிரச்சாரத்தை, மங்களகரமான மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்த பிறகு படக்குழுவினர் தொடங்கி இருக்கின்றனர். பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’.‌ இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், ஸன்னி சிங், சயீஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றின் பண்பாட்டுக் காவியமான இராமாயணத்தை புதிய கோணத்தில் புதுப்பித்திருக்கும் இந்த திரைப்படம்…

Read More

‘பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா

” பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது. அவரை பொறுத்த வரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் முப்பதிற்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார். காந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவராக பிரபாசை சொல்லலாம். அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன்…

Read More

ரசிகர்களை சந்தித்த பிரபாஸ்

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ், ஹைதராபாத்தில் தினமாகக் கூடிய ரசிகர்களை சந்தித்து, அவர்களிடம் உரையாடியும், அன்பு பாராட்டியும் மகிழ்ந்தார். ‘பாகுபலி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸிற்கு தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளைக் கடந்து தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ரசிகர்களுக்கும் தங்களது அபிமான நட்சத்திரத்தை சந்திக்க எப்போதும் ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ராதே ஷ்யாம்’ படத்திற்காக அறிவிக்கப்பட்ட போட்டியில் வெற்றி…

Read More