Nominees For Best Director 2023

ThamizhPadam Viewer’s Choice 2023! It’s time to vote For Best Director 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam. தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் சிறந்த இயக்குனருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். [totalpoll id=”9612″]

Read More

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி

‘விடுதலை – பாகம் 2’படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கிறார். இவருடன் முதன்மையான கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை…

Read More

பீட்சா மூன்றாம் பாகத்தை தொடர்ந்து பீட்சா நான்காம் பாகம் வருகிறதா? : அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் சி.வி. குமார்

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள பீட்சா வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ விரைவில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிவித்துள்ளார். தரமான திரைப்படங்கள் மற்றும் தேடல் உள்ள திறமைகளின் தாயகமான தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மூலம் சி.வி. குமார் தயாரித்த பீட்சா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘பீட்சா 2 வில்லா’ மற்றும் ‘பீட்சா 3: தி மம்மி’…

Read More

ஆஹா தளத்தில் பேட்டைக்காளி வெளியாகி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, இயக்குனர் ல.ராஜ்குமார் அறிக்கை

திரு அல்லு அரவிந்த் அவர்களால் துவக்கப்பட்ட ஆஹா OTT தளம், தமிழ் மக்களுக்கும், விமர்சகர்களுக்கும், அளவில்லா பொழுதுபோக்கை தொடர்ந்து, திரைப்படங்களாலும், வெப்சீரிஸ்களாலும் வழங்கிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஆஹா ஓடிடியில் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்ற வலைத்தொடர் பேட்டைக்காளி. இயக்குனர் ல.ராஜ்குமார் மற்றும் அவரது குழுவினர், உண்மையான ஜல்லிக்கட்டுகளில் இறங்கி படப்பிடிப்பு நடத்தியிருந்த இந்த வலைத் தொடரில், கிஷோர், வேலராம மூர்த்தி, கலையரசன், ஆண்டனி, ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கின்றனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையில், சுதர்ஷன் படத்தொகுப்பில் கிராஸ்…

Read More

*’விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா*

எல்ரெட் குமார், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’. இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (08.03.2023) நடைபெற்றது. விழா நாயகன் இளையராஜா பேசியதாவது, “ இந்தப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத களத்தில் நடக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதை. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்” என்றார். இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, “‘விடுதலை’ படத்தின் தொடக்கம் ராஜா சார்தான். 45 நிமிடங்கள் படம் எடுத்து விட்டுதான் அவரிடம் காண்பித்தேன். அந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு ராஜா சார் இசையமைத்த பாடல்தான் வழி நெடுக காட்டுமல்லி பாடல். இந்த பாடலுக்கு இசைமைக்கும்போதே, இந்தப் பாடலை நான் எழுதுகிறேன் என்று சொல்லிதான் எழுதினார். பின்னணி இசையும் கேட்டேன். என் மனதில் ஒரு உணர்வு இருக்கிறது என்று அதை அவரிடம் விவரித்தேன். அதை அவர் உள்வாங்கி பாடல் ஆக்கி ஒலியாக அதை எனக்கு கொடுத்த போது மீண்டும் அந்த உணர்வு எனக்கு கிடைத்தது. அது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ராஜா சாரின் மியூசிக்கல் மைண்ட் எப்படி வேலை செய்கிறது என்பதை அருகில் இருந்து பார்ப்பது எனக்கு மிகப்பெரிய பரிசு என்று சொல்வேன். அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் எனக்கு மிகப்பெரிய கற்றல். நாங்கள் எல்லோருமே உங்கள் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் தான் அதை சந்தோஷத்தோடு உங்களை இசையை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்” என்றார். மேலும் அவர் பேசியதாவது, ”இந்தப் படம் எல்லா வகையிலும் எல்லாருக்கும்  சவாலானதாக இருந்தது. இந்தப் படத்தில் வேலை பார்த்த என்னுடைய அணி, தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்குமே நன்றி அனைவரும் மிக…

Read More

‘விடுதலை’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ பார்ட் 1 & 2 குறித்தான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகம் இருக்கிறது. தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பார்வையாளர்களிடையே பேசு பொருளாக உள்ளது. தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ‘விடுதலை’ பார்ட் 1…

Read More

விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது!!

RS Infotainment & Red Giant Movies, எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், Vetrimaaran directorial விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் “விடுதலை” படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது!!! படத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் பேராவலை தூண்டியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில்…

Read More

‘நட்சத்திரம் நகர்கிறது’ இசை வெளியீட்டு விழா !!!

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.  இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் நாயகி…

Read More

‘அசுரன்’ இந்தி ரீமேக்கில் நடிக்க விரும்பும் நடிகர்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்த படம் அசுரன். படத்துக்கும், அதில் நடித்தவர்களுக்கும் பாராட்டுகளும் கிடைத்தன. இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அசுரன் படத்தை தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தெலுங்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். எஸ்.தாணு, சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து 💸தயாரிக்கின்றனர். ‘அசுரன்’ படத்தை இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் பார்த்து வியந்ததாக கூறப்படுகிறது….

Read More