“டேக் டைவர்ஷன்” திரை விமர்சனம்

டேக் டைவர்ஷன் என்பது குழந்தைத்தனமான அப்பாவித்தனத்துடன் 70s, 90s மற்றும் 2k குழந்தைகளைப் பற்றிய காதல் கதை.

ஐடியில் வேலை செய்யும் 90-ஸ் பையனின் திருமணத்திற்காக பெண் பார்க்கிறான் பார்க்கும் பெண்களையெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நிராகரிக்கபடுகிறார்கள் அதில் ஒரு பெண்ணை கண் மிக பெரியதாக உள்ளத்து என நிராகரிக்கிறான் அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்து அவன் நிராகரித்த அந்த பெண்ணுடனே நிச்சயம் செய்ய பாண்டிச்சேரியில் ஏற்பாடுகள் நடந்துகொண்டு உள்ளது ,

இவன் பாண்டிச்சேரிக்கு கிளம்பும் சமயம் அவனின் மேல் அதிகாரியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது அதில் அவருக்கு தெரித்த ஒரு பெண்ணை அழைத்து கொன்டு போய் பாண்டிச்சேரியில் விட சொல்கிறார் இவரும் அதை தட்டாமல் அந்த பெண்ணை அழைக்க அவளது வீட்டிற்கு சென்று பார்த்தால் அவளை காணோம் பிறகுதான் தெரிகிறது அந்த பெண்ணை கடத்திவிட்டார்கள் என்று கடத்தியவரோ 70-ஸ் பையன் அவர் அந்த பெண்ணுக்காக நிறைய பணம் செலவு செய்திருக்கிறார் காரணம் அவருக்கு அந்த பெண் மீது காதல் அந்த பெண்ணோ 2-கே கிட்,

இவர் அந்த பெண்ணை ஒரு வழியாக கண்டு பிடித்து பாண்டிச்சேரிக்கு சேசிங்-ல் சென்று கொண்டு இருக்க மறுபுறம் இவர் திருமணம் செய்யப்போகும் பெண் சென்று கொண்டிருந்த கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது அங்கு சென்று அவர்களையும் அழைத்து கொண்டு இந்த பெண் யார் என்பதை அவருக்கு விளக்கம் கொடுக்கிறார் பிறகு அந்த பெண்ணை அவர் பத்திரமாக அழைத்து கொண்டு பாண்டிச்சேரியில் பத்திரமாக விட்டாரா மற்றும் இவருக்கு நிச்சயம் நடந்ததா என்பது மீதி கதையாக உள்ளது,

இது ஒரே நாளில் நடக்கும் கதை என்பதால் இயக்குனர் ஷிவானி செந்தில் நமக்கு சற்று காமெடி கலந்த பதட்டத்துடன் கூடிய திரைக்கதையை கொடுத்துள்ளார்

நடிகர் நடிகைகள் ; சிவக்குமார்,ராம்ஸ்,ஜான் விஜய், பதின் குமார், ஜார்ஜ் விஜய், காயத்ரி, சீனிவாசன், பாலா ஜே சந்திரன்

இயக்குனர் ; ஷிவானி செந்தில்

ஒளிப்பதிவாளர்: ஈஸ்வரன் தங்கவேல்

படத்தொகுப்பு ;விது விஷ்வா,

இசை ; ஜோஸ் பிராங்க்ளின்

தயாரிப்பு; சுபா செந்தில்

Rating {2.5/5}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *