தளபதி 65’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர். ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா?

0
16

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்த முடியாமல் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.ஏற்கனவே இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி தசரா பண்டிகையின் போது வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு தாமதம் ஆவதால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்று கூறப்படுகிறது

படக்குழுவினர்களிடம் இருந்து வந்த தகவலின்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே பொங்கல் தினத்தில் தான் தளபதி விஜய்யின் ’தளபதி 65’ திரைப்படத்தையும் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ’தளபதி 65’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர். ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here