கணேசாபுரம் திரை விமர்சனம் !!

கணேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் நெருங்கிய நண்பர்கள்.

மூவரும் இரவு நேர திருடர்கள். இவர்களையும் சேர்த்து பல திருட்டுக் கும்பலை கைக்குள் வைத்து ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார் பசுபதி ராஜ்.

கொள்ளையடிக்கும் நகைகள், பணம் அனைத்தும் பசுபதி ராஜாவுக்கு சென்றுவிடும்.

இதில் சின்னா, ராஜ் பிரியன், காசிமாயன் மூவரும் திறமையான திருடர்கள். பெண், போதை என இரண்டிற்கும் ஆசைப்படாதவர்கள். அவ்வப்போது இல்லாதவர்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்கள்.

சொந்த ஊரிலேயே ஊர் பணக்காரரான கயல் பெரேரா மீது கை வைத்து விடுகிறார் சின்னா.. மூவரையும் கொலை செய்ய துடிக்கின்றனர் பெராராவின் இரண்டு மகன்களும். அதில் மூத்தவர் தான் ராஜசிம்மன்.

நாயகன் சின்னாவை சுற்றி சுற்றி வரும் நாயகியாக வருகிறார் ரிஷா. ஒரு கட்டத்தில் நாயகனும் காதலுக்கு ஓகே சொல்லி இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.

தனது தந்தையை அவமானப்படுத்திய மூவரையும் பழி வாங்க துடிக்கும் ராஜ சிம்மனை தாண்டி சின்னாவின் காதல் ஜெயித்ததா..?? மூவரின் நட்பு கடைசியில் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒளிப்பதிவு படத்திற்கு மிக பெரிய பிளஸ். இசை கதைக்கு ஏற்றவாறு இருந்தது. நடிகை நடிகர்களும் அவர்களுக்கு குடுத்த வேலையை சீரும் சிறப்பாக செய்திருந்தனர். மொத்தமாக இந்த வாரத்தின் நல்ல படம் ககுடும்பங்களுடன் பார்க்கலாம்