மலேசியாவில் கால்பதிக்கும் ஆஹா தமிழ்

மலேசியாவில் கால்பதிக்கும் ஆஹா தமிழ்,Aha, aha app review tamil, aha app tamil, Aha OTT, aha ott app review tamil, aha ott in tamil, aha ott movies, aha ott movies release date, aha ott premium, aha ott tamil, aha ott tamil launch, aha subscription free, Aha Tamil, Aha Tamil in Malaysia, aha tamil ott, aha tamil ott app, aha tamil ott details, aha tamil ott launch, aha tamil ott review, aha tamill ott, aha tamill ott launch, aha video, akashvani movie, allu arjun, ammuchi 2, kuthuku pathu, tamil cinema, tamil movies, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

கோலாலம்பூர்- 23 செப்டம்பர் 2022 – மலேசியாவில் ஆஹா தமிழ் OTT தொடங்கப்படுவதற்கான அறிமுக விழா, கோலாலம்பூர் பார்க் ரோயலில் விமரிசையாக நடந்தேறியது. இந்நிகழ்வினை மலேசிய மனிதவள அமைச்சர், டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் இந்திய ஆஹா குழுமத்தினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நம் நாட்டு மண்ணின் மைந்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளடக்கங்களில், இரண்டு ஆண்டுகள் இந்திய சந்தையில் வெற்றிநடைபோடுகின்ற ஆஹா OTT தளம், இம்முறை மலேசியாவில் பெரும் எதிர்பார்ப்போடு கால்பதிக்கின்றது.

இத்தளம் தொடங்கப்பட்டதிலிருந்து தரமான படைப்புகளை திறமையான பிரபலங்களின் மூலம் தந்துக்கொண்டிருக்கின்றது. 100 % தமிழ் படைப்புக்களை வழங்கிவரும் ஆஹா தமிழ் OTT , விக்ரம், விருமன், கூகுள் குட்டப்பா,மன்மதலீலை, அகாஷிவானி, அம்மூச்சி 2 , குத்துக்கு பத்து, எமோஜி மற்றும் சர்க்கார் வித் ஜீவா போன்ற வெற்றிப்படைப்புகளை உள்ளடக்கியது.

பிரபல நடிகர் சிம்பு மற்றும் முன்னணி இசை அமைப்பாளர் அனிருத் இருவரும் மலேசியாவில் கால்பதிக்கவிருக்கும் ஆஹா தமிழ் OTT தளத்திற்கு விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், மலேசியாவில் நடந்தேறிய அனிருத் லைவ் யின் மலேசியா 2022 கலைநிகழ்ச்சியின் OTT சேவையை உடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் தமதுரையில், ஆஹா தளத்தின் அசாதாரண முயற்சியை பாராட்டியதோடு சுயபடைப்புகளை தயாரிப்பதின்மூலம் உள்ளூர் கலைஞர்கள்,தயாரிப்பு நிறுவனங்களுக்கு உலகளவில் அங்கீகாரம் பெறும் எனக்குறிப்பிட்டார்.

உள்ளூர் படைப்புகளில் முதலீடு செய்து, மலேசிய தமிழ் படைப்புகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் முதல் இந்திய OTT தளமாக, ஆஹா தளம் விளங்கவிருக்கின்றது. இதன்மூலம், தெற்கிழக்காசியா வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதே நோக்கமாகும்.

ஆஹா நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி, திரு. அஜித் தாகூர் குறிப்பிடுகையில், ஆஹா தளத்தின் பலமாக இருப்பது, மேற்கத்திய படைப்புக்களை மட்டும் சாராமல், 100 சதவீதம் உள்ளூர் படைப்புக்களை வெளியிடுவதேயாகும்.இம்முயற்சியானது, வெறும் சிறந்த தமிழ் திரைப்படங்களை மட்டும் தராமல், உள்ளூர் கலைஞர்களையும் நிறுவனங்களையும் ஆதரிப்பதேயாகும்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” கணியன் பூங்குன்றனார் வரிகளுக்கு சிறந்த உதாரணம், மலேசிய தமிழர்கள். அனைவரையும் அன்போடும் ஆதரவோடும் வரவேற்பதில் சிறந்தர்வகள். அதே வரவேற்பை ஆஹா தளத்திற்கு வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். ஆஹா தமிழ் OTT தளம் மூலக்கூறாக, “தமிழால்,தமிழில், தமிழருக்கு” எனும் கோட்பாடோடு தொடங்கப்பட்டது. அதே வேட்க்கையோடு மலேசியாவிலும் செயல்படும் என ஆஹா தமிழின் வணிக பிரிவு தலைவர், திரு.சிதம்பரம் நடேசன் அவர்கள் குறிப்பிட்டார்.

ஆஹா தளத்தைப்பற்றி

2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தளம், இணைய காணொளி சேவையை, முழுமையான உள்ளூர் படைப்புகளுடன் தந்துகொண்டிருக்கின்றது. தெலுங்கு மொழியில் ஆரம்பிக்கப்பட்ட இத்தளம், அமோக வரவேற்பை தொடர்ந்து, தமிழிலும் இச்சேவையை விரிவாக்கம் செய்யவேண்டும் எனும் நோக்கத்தில் ஆஹா தமிழ் உதயமானது. முழுமையான உள்ளூர் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுகின்றது. ஆஹா தளத்தின் உரிமம் “Arha Media & Broadcasting Pvt. Ltd. மற்றும் Geetha Arts & My Home Group உடையதாகும். ஆஹா தளம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு படைப்புக்களை வழங்கிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *