திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை,…

Read More

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது

பொழுதுபோக்கு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும், ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து, இந்திய காவியமான இராமாயணத்தை வித்தியாசமான படைப்பு திறனுடன் இந்திய பார்வையாளர்களுக்கு மட்டுமுல்லாமல் சர்வதேச பார்வையாளர்களுக்காகவும் உருவாக்குகிறது. தொலைநோக்கு சிந்தனையைக் கொண்ட தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பல அகாடமி விருதுகளை வென்ற விசுவல் எபெக்ட்ஸ் நிறுவனமான DNEG எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி…

Read More

‘குட்நைட்’ புகழ் மணிகண்டன் நடித்திருக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது!

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S.  வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர்  காளிசாமி இயக்கத்தில், ‘குட்நைட்’ படப்புகழ் மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில்,  சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், “ஜெய ஜெய ஜெய ஹே” புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். ஒரு சாதாரண  நடுத்தர குடும்பத்து இளைஞன் தன்மானத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களே இத்திரைப்படத்தின் மையக்கரு. படம் குறித்து இயக்குநர்…

Read More

காம்பேக் கொடுக்க காத்திருக்கும் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் காரணம் என்ன என்று பார்ப்போமா…

வசந்தகால பறவை படத்தை இயக்குனர் பவித்ரன் இயக்கினார். தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இதுதான் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கு முதல் படம். பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் தன் முயற்சியை இவர் கைவிடவில்லை. அடுத்ததாக அவரையே இயக்குனராகப் போட்டு சூரியன் படத்தை இயக்கினார். அது பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அடுத்து ஜென்டில்மேன். இந்தப் படத்தை ஷங்கர் இயக்க, அசோசியேட் டைரக்டராக பவித்ரன் இருந்தார். கமல் நடிப்பில் வெளியான குரு படத்தின் கதை தான் ஜென்டில் மேன் கதையும்….

Read More

மறு ஜென்மக் கதையாக உருவாகும் ‘கங்கா தேவி’

குமரன் சினிமாஸ் சார்பில் K.N.பூமிநாதன் தயாரிக்கும் படம் ‘கங்கா தேவி’. ராகவா லாரன்ஸின் சீடரும் ‘சண்டிமுனி’ படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர், க்ரைம் கலந்த திரில்லர் கதையாக இது உருவாகிறது கதாநாயகியை மையப்படுத்தி உருவாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மஹானா நடிக்கிறார். ‘கருமேகங்கள் கலைகின்றன’, ‘வரலாம் வா’ உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘அட்டு’ படத்தில் நடித்த ரிஷி ரித்விக் கதாநாயகனாக நடிக்கிறார். நளினி…

Read More

இணையம் முழுக்க பேசுபொருளான இனிமேல் ஆல்பம் பாடல் !!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் ‘இனிமேல்’ என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இனிமேல்’ பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன்…

Read More

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணுடன் இணைந்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்!

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் அடுத்ததாக ‘உப்பென்னா’ புகழ் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் #RC16 படத்தில் நடிக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். அவருடைய விருத்தி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி…

Read More

பா.இரஞ்சித் என் சிஷ்யன் என்பதில் பெருமைப்படுகிறேன் – இயக்குனர் வெங்கட் பிரபு

ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவருடன் படத்தின் கதைநாயகி ஊர்வசி, இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் சுரேஷ்…

Read More

அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியானது

ஸ்ரீ வாரி பிலிம் பி. ரங்கநாதன் திரைத்துறையில் அனுபவமிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக வலம் வருகிறார். ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலான எண்டர்டெயின்மெண்ட் படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற இவர் இப்போது இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோருடன் முதல் முறையாக இணையும் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நியூ ஏஜ் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாகிறது. தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என்று…

Read More

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ திரைப்படத்தின் இணையதள வெளியீட்டு விழா !!

பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ திரைப்படத்திற்கான பிரத்யேக இணையதள வெளியீட்டு விழாவில் இந்தத் திரைப்படத்தை ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ உடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டினார்! அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தை, உலகளாவிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றப் படமான ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ உடன் ஒப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் படம் பார்வையாளர்கள் மத்தியில் ஆழமான…

Read More