Skip to content
Thamizh Padam

OTT

Netflix பண்டிகை: Netflix-ன் 2023 தமிழ் திரைப்பட அறிவிப்புகள்
OTT2 min readNetflix

Netflix பண்டிகை: Netflix-ன் 2023 தமிழ் திரைப்பட அறிவிப்புகள்

Netflix-ல என்ன Special?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023-ம் ஆண்டில் தன்னிடம் உரிமம் உள்ள படங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர் ரசிகர்கள் இதனை தங்கள் இல்லத்திரைகளில் நெட்ஃபிலிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்கலாம்.

தங்களுடைய லைன்-அப் படங்கள் குறித்து நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட் VP மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, "எங்களுடைய பார்வையாளர்கள் உள்ளூர் கதைகளில் இருந்து உலக படங்கள் வரை விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் விரும்புவதை தருவதற்கே நாங்கள் விருப்பப்படுகிறோம். 'பீஸ்ட்', 'நித்தம் ஒரு வானம்', 'டாக்டர்' மற்றும் 'கட்டா குஸ்தி' ஆகிய படங்கள் உலகம் முழுவதும் பார்வையாளர்களிடையே பேசுபொருளானது. அதனால், இப்போது எங்களிடம் லைன்-அப்பில் உள்ள படங்களும் அது போன்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பல ஜானர்களில் அமைந்துள்ள இந்தப் படங்களை தென்னிந்தியாவில் உள்ள பல திறமையான கலைஞர்கள் உருவாக்கி உள்ளனர். இந்தியாவைத் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கக்கூடிய அனைத்து பார்வையாளர்களுக்கும் படங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என திரைக்குப் பின்னால் டப்பிங், சப்டைட்டில் ஆகியவற்றிலும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளோம்" என்றார்.

படங்களின் பட்டியல்:

1.டைட்டில் / புராஜெக்ட்: AK 62,
தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்சன்ஸ்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

2. டைட்டில் / புராஜெக்ட்: சந்திரமுகி 2,
தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்ஸ்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

3. டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்ஷன் நம்பர் 20,
தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்ஸ்,
மொழி: தமிழ்

4. டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்‌ஷன் நம்பர் 24,
தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்ஸ்,
மொழி: தமிழ்

5. டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்‌ஷன் நம்பர் 18,
தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்ஸ்,
மொழி: தமிழ்

6. டைட்டில் / புராஜெக்ட்: ஆர்யன்,
தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்,
மொழி: தமிழ், தெலுங்கு

7. டைட்டில் / புராஜெக்ட்: இறைவன்,
தயாரிப்பு நிறுவனம்: பேஷன் ஸ்டுடியோஸ்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

8. டைட்டில் / புராஜெக்ட்: இறுகப்பற்று,
தயாரிப்பு நிறுவனம்: பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் LLP,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

9. டைட்டில் / புராஜெக்ட்: ஜப்பான்,
தயாரிப்பு நிறுவனம்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

10. டைட்டில் / புராஜெக்ட்: ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்,
தயாரிப்பு நிறுவனம்: ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ்
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

11. டைட்டில் / புராஜெக்ட்: மாமன்னன்,
தயாரிப்பு நிறுவனம்: ரெட் ஜெயண்ட் மூவிஸ்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

12. டைட்டில் / புராஜெக்ட்: ரிவால்வர் ரீட்டா,
தயாரிப்பு நிறுவனம்: தி ரூட் / பேஷன் ஸ்டுடியோஸ்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

13. டைட்டில் / புராஜெக்ட்: தலைகோதல்,
தயாரிப்பு நிறுவனம்: YNOT ஸ்டுடியோஸ்,
மொழி: தமிழ்

14. டைட்டில் / புராஜெக்ட்: தங்கலான்,
தயாரிப்பு நிறுவனம்: ஸ்டுடியோ க்ரீன்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

15. டைட்டில் / புராஜெக்ட்: வாத்தி,
தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்/ ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்/ ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

நெட்ஃபிலிக்ஸ் குறித்து:

உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் 223 மில்லியன் பெய்ட் மெம்பர்ஷிப்ஸூடன் 190 நாடுகளில் டிவி சீரிஸ், டாக்குமெண்ட்ரிஸ், சிறப்புப் படங்கள் மற்றும் மொபைல் கேம்ஸூடன் பல ஜானர்கள் மற்றும் மொழிகளில் தனது சேவையைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் தங்களது விருபத்திற்கேற்ற வகையில் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம், விளையாடலாம், மீண்டும் பார்க்கலாம். எப்போது வேண்டுமானாலும் தங்கள் திட்டங்களை மாற்றிக் கொள்ளலாம்.

இன்னும் ஒரு பெரிய Update இருக்கு...

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp