Skip to content
Thamizh Padam
Search films, stars, news…/Saved

ஆக்டோபஸ் · Review

ஆக்டோபஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

ஆக்டோபஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Octopus Tamil Movie Review

Critic · Our rating

உறவுகளுக்குள் இருக்கும் மர்மங்களையும், சஸ்பென்ஸ் கலந்த கோர்ட்ரூம் டிராமாக்களையும் விரும்புபவர்களுக்கு 'ஆக்டோபஸ்' நிச்சயம் ஒரு விறுவிறுப்பான அனுபவத்தைத் தரும்.

ஆக்டோபஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
Review

ஆக்டோபஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Octopus Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

உறவுகளுக்குள் இருக்கும் மர்மங்களையும், சஸ்பென்ஸ் கலந்த கோர்ட்ரூம் டிராமாக்களையும் விரும்புபவர்களுக்கு 'ஆக்டோபஸ்' நிச்சயம் ஒரு விறுவிறுப்பான அனுபவத்தைத் தரும்.

ஆக்டோபஸ் (2026) - முன்னோட்டம்

ஜெயச்சந்திரா ஹாஸ்மி இயக்கத்தில், அஸ்வின் குமார் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் சஸ்பென்ஸ் திரில்லர் வெப் தொடர் 'ஆக்டோபஸ்' (Octopus). காணாமல் போன ஒரு பெண்ணைத் தேடும் மர்மமும், அதனைத் தொடர்ந்து நடக்கும் பரபரப்பான நீதிமன்றப் போராட்டமுமே இத்தொடரின் மையக்கரு.

ஆக்டோபஸ்கதை

அன்பு நகர் எனும் குடியிருப்புப் பகுதிக்கு புதுமணத் தம்பதிகளாகக் குடிவருகிறார்கள் வருண் (அஸ்வின் குமார்) மற்றும் நிகிதா (நித்யா). இயல்பிலேயே அன்பான சுபாவம் கொண்ட நிகிதா, அக்கம்பக்கத்தினர் அனைவரின் மனதிலும் எளிதில் இடம் பிடிக்கிறார். ஆனால், வீட்டிற்குள் கணவரால் அவர் துன்புறுத்தப்படுவதை அறியும் குடியிருப்புவாசிகள், அவருக்கு உதவ முன்வருகிறார்கள்.

இந்நிலையில், ஒருநாள் இரவு நிகிதா திடீரென மாயமாகிறார். இது குறித்து அர்ச்சனாவுக்குச் சந்தேகம் எழ, புகார் அளிக்கப்பட்டு வழக்கு நீதிமன்றம் வரை செல்கிறது. அங்கு, "நிகிதா என்ற பெயரில் யாரும் இல்லை; தனக்குத் திருமணமே ஆகவில்லை" என்று அஸ்வின் தரப்பு ஒரு அதிர்ச்சிகரமான வாதத்தை முன்வைக்கிறது. அதன்பின் நடக்கும் திடுக்கிடும் திருப்பங்களும், சட்டப் போராட்டமுமே மீதிக்கதை.

ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ள மர்ம வெப் தொடர்தான் 'ஆக்டோபஸ்', மொத்தம் 7 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரின் ஒவ்வொரு எபிசோடும் 20 நிமிடங்களுக்கு குறையாமல், அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை விரும்பும் ரசிகர்களுக்கு, இந்த வார வீக்கெண்டில் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு தரமான வெப் தொடராக இந்த 'ஆக்டோபஸ்' இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

Stills

What works

  • கதைக்கரு
  • அஷ்வின் குமார் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரனின் யதார்த்தமான நடிப்பு.
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • திரைக்கதை திருப்பங்கள்
  • தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசை சஸ்பென்ஸ் காட்சிகளுக்குத் தேவையான பதற்றத்தைச் சரியாகக் கடத்துகிறது.

What doesn't

  • 6 முதல் 7 எபிசோடுகள் கொண்ட இத்தொடரில், கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த ஆரம்பத்தில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
  • எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
1 / 5

ஆக்டோபஸ் — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp