ஒன் மேன் (2026) – முன்னோட்டம்
‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார், உலக சினிமா வரலாற்றிலேயே யாருமே செய்யாத ஒரு அசாத்திய சாதனையாக இயக்கி, தயாரித்து, அவரே அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வெளியிட்டுள்ள திரைப்படம் ‘ஒன் மேன்’ (One Man).
ஒன் மேன் கதை

நான்கு நண்பர்கள் ஒரு ஆராய்ச்சி மாநாட்டிற்காக காட்டில் பயணிக்கும் போது கார் பழுதாகிறது. அங்கிருக்கும் ஒரு ரகசிய ஆய்வகத்தில், உலக மக்கள் அனைவரையும் 10 நாட்களுக்கு மறைய வைக்கும் ஒரு ரசாயன கண்டுபிடிப்பு பற்றித் தெரியவருகிறது. அந்த 10 நாட்களில் உலகை ஆள நினைக்கும் பேராசையும், மனித நேயமற்ற எண்ணங்களும் கொண்ட நண்பர்களுக்கு இடையே நடக்கும் மோதலும், இறுதியில் உலகம் என்ன ஆகிறது என்பதும்தான் கதை.

ஒரு சினிமா உருவாக்கத்தில் இத்தனை துறைகளையும் ஒருவரே கையாண்டு வெற்றிபெற முடியும் என்பதற்கு தமிழ் சினிமாவில் உருவான ஒரு வரலாற்றுப் பெருமை இந்த ‘ஒன் மேன்’! சினிமா ஆர்வலர்களும், வித்தியாசமான முயற்சிகளை விரும்புபவர்களும் கண்டிப்பாகக் பார்க்க வேண்டிய படம்.
Read Also: Insidious: Out of the Further Movie Review
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡சங்ககிரி ராஜ்குமாரின் உழைப்பு
➡திரைக்கதையும் பின்னணி இசையும்
➡மனிதனின் பேராசை, பாசம் மற்றும் “மெடிக்கல் மாஃபியா” குறித்த ஆழமான கருத்துகளைப் படம் அழுத்தமாகப் பேசுகிறது.
படத்தில் கடுப்பானவை
➡முன்கூட்டியே யூகிக்கக்கூடிய சில காட்சிகள்
➡கிராபிக்ஸ் (VFX)
ரேட்டிங்: ( 3 / 5 )





































