“ஷசுன் நியுஸ்”யூடியுப் நியூஸ் சேனல் இன்று முதல்…

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஶ்ரீ ஷங்கர் லால் சுந்தர் பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் தொல்லியல் நிபுணர் பத்ம விபூஷண் விருது பெற்ற திரு பீபி லால் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இப்படம் இராஜஸ்தானில் நடைபெற்ற தேசியத் திரைப்படவிழாவில் பங்கேற்று சிறந்த ஆவணப்படமாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியில் சமஸ்கிருதத் துறைப் பேராசிரியர் முனைவர் ரமா தேவி அவர்களின் எண்ணத்தில் உதயமாகிக் காட்சி ஊடகவியல் துறைப்பேராசிரியர் திரு.எபினேசர் அன்னாதாஸ் அவர்களின் இயக்கத்தில்,முனைவர் எபிராஜ் அவர்களின் இசையில் உருவான ஆவணப்படம் , பலராலும் பாராட்டப்பட்டது. விழாவில் முனைவர் சத்யமூர்த்தி (Former Director, ASI), முனைவர் நந்திதா (Director, CPR Institute), திரு. பிரசன்ன வெங்கடேஷ் (Celebrity Photographer) பிரியா ராஜ்குமார்(Actress, Film Personality), திரு ராம் அருணாசலம்(Movie Critic, Actor), திரு கோபி (Actor, Voice over Artist) , கிரே இராமநாதன் அவர்கள் (Film Actor, Voice Artist) and திரு (Falutist). ஆகியோர் கலந்து கொண்டு ஆவணப்படத்தைப் புகழ்ந்துரைத்தனர். விழாவிற்கு வருகை புரிந்தவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி அவர்கள் வரவேற்றார். கல்லூரி யின் கௌரவச் செயலர் ஶ்ரீ அபயகுமார் ஶ்ரீ ஶ்ரீ மால் ஜெயின் அவர்களும் இணைச் செயலர் திரு ஹரிஷ் எல் மேத்தா அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மீடியா எண்டர்டெயின்மெண்ட் துறையில்
சான்றிதழ் படிப்பை நிறைவு செய்த 36 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. ஷசுன் கல்லூரி மாணவியரால் உருவாக்கப்பட்ட
“ஷசுன் நியுஸ்” என்ற பெயரில் யூடியுப் நியூஸ் சேனல் இன்று முதல் ஒலி (ஒளி) பரப்புத் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *