சினிமாவில் 45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன்

சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் தனது சினிமா பயணத்தின் 45வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில், அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வினை அவரது ரசிகர் மன்றம் சார்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நடிகர் மோகன் ரீ என்ட்ரி ஆகும் ஹரா திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, இசையமைப்பாளர் லியாண்டர் மார்டி உள்ளிட்டோரும் இவ்விழாவினில் கலந்து கொண்டனர்.

Read More