Skip to content
Thamizh Padam

News

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!
News1 min read

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!

Tamil Film 'Arivu' Selected for 57th IFFI Goa

Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), இந்தியன் பனோரமா ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், உலக அளவில் கவனம் பெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ள தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘அறிவு’ பெற்றுள்ளது.

சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுடன் கூடிய கருத்துகளை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்லும் படைப்பாக ‘அறிவு’ உருவாகியுள்ளது. இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக சாய்பிரபு ஜெயக்குமார் செயல்படுகிறார்.

‘அறிவு’ திரைப்படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். D. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனித்துள்ளார். கலை இயக்குநராக S.K. பணியாற்றியுள்ளார். ராமு M. தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், அரவிந்த் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், தென்னரசு தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர்.

படம் வெளியாவதற்கு முன்பே இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியிருப்பது ‘அறிவு’ திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகும். மேலும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே உலகத் திரைப்பட அரங்கில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது ‘அறிவு’.

பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றுள்ள அங்கீகாரத்துடன் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உலகத் திரைப்பட விழாவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்துடன், Movietron Production நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள ‘அறிவு’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp