Thalapathy Vijay 63 First Look & Second Look – BIGIL

தளபதி விஜயின் பிறந்தநாள் சிறப்பாக ‘பிகில்’ ங்கிற பெயரோட First Look ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. அதுல ரெண்டு விஜய் இருந்தாங்க அதோட midnight 12 மணிக்கு Second Look ரிலீஸ் பண்ணிருந்தாங்க. இதுதான் தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த பிறந்தநாள் சிறப்பாக சொல்லாம்.

வெளியாகியிருந்த second look ல 4 விஜய் இருக்காங்க. முக்கியமாக பக்காவா இருக்கிற ஓல்ட் விஜய் இதிலையும் சும்மா தாறுமாறா இருக்கிறாரு.

இவரோட கழுத்தில சிலுவை போட்ட செயின் ஒன்னு போட்டுருக்காரு. இத வச்சே சொல்லிடலாம் Micheal Characterla இருக்கிறது ஓல்ட் விஜய்தான்னு. இவருக்கு பின்னாடி லுங்கி கட்டிட்டு இருக்க விஜய், Micheal பெயர் போட்ட டீ ஷர்ட் போட்ட்ருக்காரு. ஜெர்சியில் 5 ஆம் எண் போடப்பட்டதின் காரணம் படம் பார்த்த பிறகு தான் தெரிய வரும்.

அவரோட கையில பெரிய நீளமான செயின் இருக்கு. இவர் மட்டுமில்லாமல் கையில bag வச்சிருக்க விஜய்ன்னு இந்த மூணு பேரோட புருவத்தில எந்த ஒரு வெட்டும் இல்ல ஆனா கையில கால்பந்து வச்சிருக்க விஜய் புருவத்தில அந்த
வெட்டு இருக்கு. இதை பார்த்தவரையில் கையில கால்பந்து வச்சிருக்க விஜ்யதான் ஸ்டோரியோட presentல வர மாதிரியும், மத்த 3 விஜய்யும் ஓல்ட் கெட்டப்ல இருக்கிற விஜய்தானு சொல்ல முடியுது.

இது தவிர இந்த செகண்ட் லுக் ல ‘AND THE NAME IS’ அப்படிங்கிற wordings இருக்கு இது மூலமா விஜய் அவர்களோட பெயர் Micheal அப்டினு சொல்லவராங்கனு யூகிக்க முடியுது. firstlook ரெண்டு விஜயோட கன்னத்தில மச்சம் இருந்தது ஆனா இந்த secondlook posterla எங்கையும் இல்ல.

குறிப்பா secondlook ல pride is an emotion ன்னு சில வரிகளோடு ஒரு message இது மூலமா convey பண்ணிருக்காங்க. இது மூலமா பெருமை அப்பிடிங்கின்றது எமோஷனல் ஆனா ஒரு விஷயம், எப்போ ஒரு தனிப்பட்ட மனிதன் அவங்க நினைக்கிற விஷயத்தை முடிச்சி சந்தோச படுறாங்களோ அப்போ ஏற்பட கூடிய எமோஷன் தான் பெருமைன்னு சொல்லிருக்காங்க.

இது மூலமா ஒரு விஷயத்தை reveal பண்ணிருக்காங்க அது என்னென்ன ஓல்ட் விஜய் சில காரணத்தால கால்பந்தில சாதிக்க முடியாம போயிருக்கலாம். young ah இருக்கிற விஜய்க்கு பயிற்சியாளரா இருந்து help பண்ணற ஒரு ஸ்டோரியாதான் இது இருக்குனு guess பண்ண முடியுது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here