அந்தரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

அந்தரன் (2026) – முன்னோட்டம்

பிரஜின் மற்றும் இவானா நடிப்பில், இயக்குநர் சந்தோஷ் இராவணன் இயக்கத்தில் இன்று (ஜூன் 26, 2026) திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் க்ரைம் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படம் ‘அந்தரன்’

‘அந்தரன்’ என்றால் “வேடன்” என்று பொருள். இந்தத் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்குக் கவர்ந்தது? ஒரு குவிக் பார்வை இதோ

அந்தரன் கதை

கார்த்திகா (இவானா) என்ற இளம் பெண்ணைத் திருமணம் செய்ய வரும் ஆண்கள் அனைவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இந்தத் தொடர் மரணங்களின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன, கார்த்திகாவின் கடந்த காலத் துயரங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பதைக் கண்டறிய ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி (பிரஜின்) களமிறங்குகிறார். அவர் உண்மைகளை எப்படிக் கண்டுபிடித்தார், அந்த ‘வேடன்’ யார் என்பதே படத்தின் விறுவிறுப்பான கதை.

‘அந்தரன்’ – சீட் நுனிக்கே வரவழைக்கும் சில திருப்பங்களுடனும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்புடனும் வெளிவந்திருக்கும் ஒரு சுவாரசியமான க்ரைம் த்ரில்லர். வார இறுதியில் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தியேட்டரில் பார்க்கத் தகுந்த படம்!

Read Also: Boonie Bears: The Hidden Protector Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡பிரஜினின் மற்றும் இவானாவின் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡சுவாரசியமான திரைக்கதை
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡ படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡முன்னரே கணிக்கக்கூடிய சில காட்சிகள்
➡மெதுவான முதல் பாதி

ரேட்டிங்: ( 2.75 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபூனி பியர்ஸ் – தி ஹிட்டன் ப்ரோடெக்டர் தமிழ் திரைப்பட விமர்சனம்