இம்மார்ட்டல் தமிழ் திரைப்பட விமர்சனம்

இம்மார்ட்டல் (2026) – முன்னோட்டம்

மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் வெளியான ‘இம்மார்ட்டல்’ (Immortal) திரைப்படத்தின் விரிவான விமர்சனம்

இம்மார்ட்டல் கதை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறக்கும் ஒரு அமானுஷ்யக் குழந்தையில் இருந்து கதை தொடங்குகிறது. தற்காலத்தில், சென்னையில் வேலை பார்க்கும் மஹி (ஜி. வி. பிரகாஷ்) வாடகைக்கு வீடு தேடி அலைகிறார். அப்போது, குறைந்த வாடகையில் ரூம் ஷேரிங் செய்ய அழைக்கும் அழகிய பெண் சிந்துவை (கயாடு லோஹர்) சந்திக்கிறார். அவளது அழகில் மயங்கி அந்த ஆடம்பர வீட்டில் குடியேறும் ஜி.வி. பிரகாஷுக்கு, சில நாட்களிலேயே வீட்டில் நடக்கும் மர்மமான சம்பவங்களால் சந்தேகம் எழுகிறது.

ஒரு கட்டத்தில், சிந்து ஒரு சாதாரண பெண் அல்ல; 4,000 வருடங்களாக இளைஞர்களின் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழும் ஒரு ரத்தக் காட்டேரி (Vampire) என்பதும், அந்த ஃபிளாட்டை விட்டுத் தப்ப முடியாது என்பதும் தெரியவருகிறது. கயாடுவின் பிடியில் இருந்து ஜி. வி. பிரகாஷ் தப்பித்தாரா என்பதே மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான வாம்பயர் த்ரில்லர் முயற்சியாக ‘இம்மார்ட்டல்’ வந்துள்ளது. ஹாரர் மற்றும் த்ரில்லர் ரசிகர்களுக்கு தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு நல்ல என்டர்டெய்னர்!

Read Also: 7 Star Boys Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡ஜி. வி. பிரகாஷ் – கயாடு லோஹரின் அட்டகாசமான நடிப்பு
➡VFX/CGI
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡டெக்னிக்கல் தரம்
➡சாம் C.S. பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡இரண்டாம் பாதித் தொய்வு
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

ரேட்டிங்: ( 3 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை4 ஈடியட்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஐ அம் கேம் தமிழ் திரைப்பட விமர்சனம்