இரட்டையர் (2026) – முன்னோட்டம்
ஜெகதீஷ் தம்பையா இயக்கத்தில், அபிநயா ஆனந்த், சுப்பிரமணிய சிவா நடிப்பில் வெளியாகியிருக்கும் இரட்டையர் (Irattaiyar) திரைப்படத்தின் முழுமையான விமர்சனம் இதோ.
ஒரு விபத்திற்குப் பிறகு இரட்டைச் சகோதரிகளின் வாழ்க்கையில் நடக்கும் மர்மங்களும், அவர்கள் சந்திக்கும் உளவியல் ரீதியான சிக்கல்களும் தான் இந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் (Psychological Thriller) படத்தின் கதைக்களம்.

இரட்டையர் கதை
ஒரு கோரமான கார் விபத்தில் தந்தை இறந்துவிட, தாய் கடுமையான காயங்களுடன் உயிர் தப்புகிறார். இரட்டைச் சகோதரிகளான மகள்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க போராடுகிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு, பிளாஸ்டிக் சர்ஜரி (Plastic Surgery) முடிந்து முகம் மாறிய நிலையில் தாய் வீட்டிற்குத் திரும்புகிறார். ஆனால், அவரின் மர்மமான மற்றும் விசித்திரமான நடவடிக்கைகள் மகள்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. தங்களைச் சுற்றியுள்ள உலகம் மற்றும் தங்களின் தாயின் அடையாளம் என எல்லாமே ஒரு பெரிய பொய் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதே ‘இரட்டையர்’ படத்தின் கதை.

Read Also: He Man Masters Of The Universe Movie Review
படத்தில் சிறப்பானவை
➡வித்தியாசமான கதைக்கரு
➡அபிநயாவின்- ன் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡படத்தின் நீளம் (1 மணி நேரம் 32 நிமிடங்கள் மட்டுமே)
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡சிறப்பான இறுதி காட்சி
படத்தில் கடுப்பானவை
➡சாதாரண தயாரிப்பு தரம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2.5 / 5 )




























