விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (2026) – முன்னோட்டம்
வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா – மமிதா பைஜூ காம்போவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. ஆக்ஷன், ரத்த களறி படங்களுக்கு மத்தியில் ஒரு தூய்மையான குடும்பத் திரைப்படமாக வந்திருக்கும் இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? வாங்க பார்க்கலாம்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதை
பரம்பரை பணக்காரரான சூர்யா (சஞ்சய் விஸ்வநாத்) ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்புகிறார். தனது மகன் தங்கம் வென்று வந்த மகிழ்ச்சியில் ராதிகா இருந்தாலும், 42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறானே என்கிற கவலையில் இருக்கிறார்.

ஆனால், இந்த குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று ராதிகா தொடர்ந்து சூர்யாவிடம் கூறி வருகிறார். இதனால் வாடகைத் தாய் மூலம் குழ்நதையை பெற்றெடுக்கிறார் சூர்யா. தனது பேரனை ராதிகா மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்கிறார். இந்த சமயத்தில் அந்த குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, அவனுக்கு உடனடியாக bone marrow transplant அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர் கூறுகிறார். ஆனால், குழந்தையின் தாயின் எலும்புதான் இதற்கு சரியாக இருக்கும், அவரை உடனடியாக அழைத்து வாருங்கள் என கூறுகிறார்கள்.
இதனால் உடனடியாக வெளிநாட்டிற்கு புறப்படும் சூர்யா, அங்கு தன் குழந்தையின் அம்மாவான மமிதா பைஜூவை சந்தித்து, சூழ்நிலையை எடுத்துக்கூறி, அவரை இந்தியாவிற்கு அழைத்து வருகிறார். குழந்தைக்காக வரும் மமிதா பைஜூவிற்கு சூர்யா மீது காதல் ஏற்படுகிறது; நான் உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என அவர் கூறுகிறார். ஆனால், சூர்யா மமிதாவை ஏற்க மறுக்கிறார். சூர்யா மனம் மாறினாரா இல்லையா? இவர்களின் காதல் இணைந்ததா இல்லையா? என்பதே படத்தின் மீது கதை.


குடும்பத்துடன் சென்று திரையரங்கில் பார்த்து மகிழக்கூடிய ஒரு கியூட் அண்ட் ஸ்வீட்டான ‘ஃபீல்-குட் ஃபேமிலி என்டர்டெய்னர்’. சூர்யா ரசிகர்களுக்கும், நல்ல குடும்பத் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கும் இந்தப் படம் கண்டிப்பான ஒரு ‘மஸ்ட் வாட்ச்’ (Must Watch)!
Read Also: Photographer Tamil Movie Review
படத்தில் சிறப்பானவை
➡வெங்கி அட்லூரியின் திரைக்கதை
➡சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் அசாத்திய நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்களும் பின்னணி இசையும்
➡கெமிஸ்ட்ரி & நகைச்சுவை
படத்தில் கடுப்பானவை
➡இரண்டாம் பாதியில் தொய்வு
➡மெதுவான திரைக்கதை
ரேட்டிங்: ( 3.5 / 5 )




































