ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்

யார் நாணயம் திருடினார்கள், யார் நாணயம் தவறி அதை சுட்டார்கள் என்கிற குழப்பம் நீடிக்கும்வரை சலிப்பாகச் சென்று கொண்டிருந்த லக்ஷுரி டாஸ்க், அந்த சதிகள் வெளிப்பட்டு யார் எந்த நாணயத்தை வைத்திருக்கிறாரோ, அது தொடர்பான இடத்தை ஆட்சி செய்யலாம் என்கிற நிலைமையாக மாறிய பிறகு ஆட்டம் சற்று சூடு பிடித்துவிட்டது.

இது பிக் பாஸில் மட்டும் நடக்கும் விளையாட்டல்ல. இதுவரையான மனித வரலாற்றில் பெரும்பான்மையாக நிகழ்ந்த கொலைவெறி விளையாட்டுதான் இது. இனியும் நிகழப் போகும் ரத்த வரலாறும் இதுவே. ஆம். “அது வெறும் சுவருன்னு நெனச்சியா… அதிகாரம்” என்று ‘மெட்ராஸ்’ படத்தில் வரும் வசனம் போல, ‘நிலம் என்பது அதிகாரம்’. அதையொட்டிதான் ஏராளமான உலகப் போர்கள் நடந்துள்ளன. அதையொட்டி உலக வரைபடங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *