புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஃபஹத் பாசிலுடன் 2 சுவாரஸ்யமான திரைப்படங்களில் இணைந்துள்ளனர்

முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மலையாளப் படமான பிரேமலு படத்தினை தெலுங்கு ரசிகர்களுக்கு தெலுங்கு மொழியில் வெளியிட்டதன் மூலம் திரைப்பட விநியோகத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் ஷோயிங் பிசினஸ் (Showing Business) பேனரின் கீழ் இப்படத்தை விநியோகித்தார். எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் முதல் வெளியீடே தெலுங்கு பதிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்கள் பேராதாரவுடன் ஒவ்வொரு நாளும் பெரும் வசூலை குவித்து வருகிறது. பிரேமலுவின் பிளாக்பஸ்டர் வெற்றியால் பெற்ற நம்பிக்கையால் உற்சாகமடைந்துள்ள எஸ்.எஸ்.கார்த்திகேயா அடுத்ததாக…

Read More

பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் Once Upon A Time In Madras (ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்)..!

ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா , ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A Time In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், ஷான்…

Read More

ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த…

Read More

திகட்டாத காதல் காவியமாக உருவாகும் ‘ஆலன்’

இயக்குநர் சிவா .ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, ‘அருவி’ மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே. உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 3 S பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர்…

Read More

“பைக் டாக்சி” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் ‘பைக் டாக்சி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ளக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர். இவ்விழாவினில்… பைக் டாக்சி படத்தின்…

Read More

ஏப்ரல் 4 அன்று ‘கள்வன்’ ரிலீஸ் ஆகிறான்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது என்பதைப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘கள்வன்’. இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார் ரேவா….

Read More

பிரைம் வீடியோ திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” மார்ச் 29 தேதி அன்று வெளியிடப்படவிருப்பதை அறிவித்தது

நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ளார். “இன்ஸ்பெக்டர் ரிஷி” இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 தேதி அன்று பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள்…

Read More

இந்தியாவின் உள்ள எக்ஸ் தளத்தின் சிறந்த ஹேஸ்டாக்குகள் : ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – புதிய சாதனைகளை நிகழ்த்துவதிலும், பல சாதனைகளை முறியடிப்பதிலும் ஏனைய நட்சத்திர நடிகர்களில் தனித்து நிற்கிறார். அவருடைய பிரத்யேகமான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் காரணமாக.. பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடிப்பதுடன், இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகளவில் அவருடைய திரைப்படத்தை ரசிகர்களுக்காக கொண்டு செல்வதிலும் தனித்துவத்தை பின்பற்றுகிறார். ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – தெலுங்கு திரையுலகின் வணிக எல்லையிலிருந்து பான் இந்திய அளவிலான சந்தையின் நட்சத்திர ஐகானாக உயர்ந்திருக்கிறார். ட்விட்டர் இந்தியா நிறுவனம்…

Read More

“அரிசி” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் S. A.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இன்றைய சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் “அரிசி”. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவக்கியுள்ளது. நம் உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவாசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகிறது. மேற்கத்திய…

Read More

அநீதிக்கு எதிராகப் போராடும் நாய் !

விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி. இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்தவர். சினிமா மீதுள்ள தீராக்காதலால் மருத்துவப் பணியை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து பல குறும்படங்களை இயக்கி இப்பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். சமீபத்தில் வெளியாகி சக்கைக்போடு போடும் ‘மஞ்சும்மல் பாய்ஸ் ‘போல இப்படமும் கொடைக்கானல் பின்னணியில் எடுக்கப்படுகிறது….

Read More