Skip to content
Thamizh Padam

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி · Review

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி திரைப்பட விமர்சனம்
Review

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி திரைப்பட விமர்சனம்

Mookuthi Amman 2 Movie Review

Critic · Our rating

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் முற்றிலும் புதுமையான ஆக்‌ஷன் ஃபேண்டஸி பாணியில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2', குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு கமர்ஷியல் தெய்வீக கொண்டாட்டம்!

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி திரைப்பட விமர்சனம்
Review

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி திரைப்பட விமர்சனம்

Mookuthi Amman 2 Movie Review

Critic · Our rating

Fans:Rate it

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் முற்றிலும் புதுமையான ஆக்‌ஷன் ஃபேண்டஸி பாணியில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2', குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு கமர்ஷியல் தெய்வீக கொண்டாட்டம்!

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி (2026) - முன்னோட்டம்

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் வெளியான 'மூக்குத்தி அம்மன் 2' (2026) திரைப்படத்தின் விரிவான திரை விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி கதை

போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் நடிகை நயன்தாராவுக்கு இரவில் புரியாத புதிராக கனவுகள் வருகின்றன. இந்த கனவில் வரும் அமானுஷ்யங்கள் நயன்தாராவை மயிலாஞ்சி என்கிற ஊருக்கு போக சொல்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், மயிலாஞ்சி தனது அம்மாவுடன் செல்ல முடிவு செய்கிறார்.

நயன்தாரா அங்கு வரும் நேரத்தில், 2000 ஆண்டுகளாக ஜீவசமாதியில் உள்ள ரெஜினாவை மந்திரவாதி சுனில் தனது சக்தியால் மீண்டும் உயிர்ப்பிக்கிறார். உயிர்த்தெழும் ரெஜினா தனது கணவரை தேடி கண்டுபிடித்து, நயன்தாராவை பலி கொடுக்க முடிவு செய்கிறார்.

பலி கொடுக்க அவரை அழைத்து வரும்போது நயன்தாராவை காப்பாற்ற மூக்குத்தி அம்மன் என்ட்ரி தருகிறார். அப்போதுதான் தெரிகிறது, மக்களை காப்பாற்ற மூக்குத்தி அம்மன்தான் மறுபிறப்பு எடுத்துள்ளார் என்று. ஆனால், இது நயன்தாராவுக்கு தெரியவில்லை.

தான் மூக்குத்தி அம்மனின் மறுபிறப்பு என்றே தெரியாமல் இருக்கும் நயன்தாரா எப்படி தீயசக்தியான ரெஜினாவை அழித்து மீண்டும் ஊர் மக்களை காப்பாற்றினார் என்பதே இப்படத்தின் மீதி கதை.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் முற்றிலும் புதுமையான ஆக்‌ஷன் ஃபேண்டஸி பாணியில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2', குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு கமர்ஷியல் தெய்வீக கொண்டாட்டம்!

Read alsoScene Tamil Movie Review

Stills

What works

  • சாதாரண பெண் போலீஸாக இயல்பாக நடித்து, இடைவேளைக்கு பின் கையில் சூலம் ஏந்தி கம்பீரமான மூக்குத்தி அம்மனாக தோன்றும் இடங்களில் தியேட்டரில் மாஸ் காட்டுகிறார் நயன்தாரா.
  • ரெஜினா கசாண்ட்ராவின் வில்லத்தனம்
  • சுந்தர் சியின் மேக்கிங் & VFX
  • பின்னணி இசையும், முக்கியமாக கிளைமாக்ஸில் வரும் அம்மன் பாடலும் படத்திற்கு தேவையான பக்தி மற்றும் ஆக்‌ஷன் எனர்ஜியைக் கூட்டியுள்ளது

What doesn't

  • சுந்தர் சி - யோகி பாபு - ஊர்வசி கூட்டணி இருந்தும், பல இடங்களில் காமெடிகள் எதிர்பார்த்த அளவுக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை.
  • திரைக்கதை தொய்வு

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
1 / 4

மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp