சம்ஹாரம் (2026) – முன்னோட்டம்
வித்யா புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல் முருகன் சம்ஹாரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம் பிரபா இதில் பிரஜின் பத்மநாபன், ஷருமிஷா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா ஆகியோர் நடித்துள்ளனர்.

சம்ஹாரம் கதை
ஒரே ஒரு வீட்டிற்குள், ஒரே ஒரு இரவில் நடக்கும் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதை தான் இந்த ‘சம்ஹாரம்’. நாயகன் பிரஜினுக்கு மறுநாள் காலையில் திருமணம் நடக்கவிருக்கிறது. ஆனால், அவரது தங்கை அன்றிரவே தன் காதலனுடன் தப்பிச்செல்ல திட்டமிடுகிறார். இதே நேரத்தில், அடையாளம் தெரியாத ஒருவர் தன் மகளுடன் பிரஜின் வீட்டில் அன்றிரவு மட்டும் தங்குவதற்கு அடைக்கலம் கேட்கிறார். இதன் பிறகு அந்த வீட்டிற்குள் நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்களும், எதிர்பாராத ஆபத்துகளும் தான் படத்தின் மீதிக்கதை.


Read Also: IRATTAIYAR Movie Review
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡பிரஜினின்- ன் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡மிரட்டலான வில்லன்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡சிறு சிறு லாஜிக் குறைபாடுகள்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2.5 / 5 )





























