சண்டக்காரி (2026) – முன்னோட்டம்
ஆர். மாதேஷ் இயக்கத்தில் விமல் மற்றும் ஸ்ரேயா சரண் நடிப்பில், சுமார் 7 ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு வெளியாகியுள்ள ‘சண்டக்காரி’ (Sandakari) திரைப்படத்தின் விமர்சனம்
சண்டக்காரி கதை

லண்டனில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் மாயா (ஸ்ரேயா), கடுமையான குணமும் கோபமும் கொண்டவர். அவரிடம் உதவியாளராகச் சேருகிறார் வெற்றி (விமல்). மாயாவின் கோபத்தைத் தாங்கி வேலை செய்யும் விமல், தான் உருவாக்கிய ஒரு மொபைல் செயலியை (App) அறிமுகப்படுத்தவே இந்த வேலையில் நீடிக்கிறார்.
ஒரு கட்டத்தில் மாயாவிற்கு ஏற்படும் சட்டப் பிரச்சனையைத் தீர்க்க, விமலுடன் இணைந்து நடிக்கும் சூழ்நிலை உருவாகிறது. அதன் பிறகு விமல் அவரைத் தன் கிராமத்திற்கு அழைத்து வருகிறார். லண்டன் பாஸ் – எம்ப்ளாய் இடையே நடக்கும் மோதலும், கிராமத்திற்கு வந்த பிறகு இருவருக்கும் இடையே காதல் மலர்கிறதா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

வார இறுதியில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு சாதாரண கமர்ஷியல் காமெடியைப் பார்க்க விரும்புபவர்கள் ஒருமுறை முயலலாம்.
Read Also: Nalla Padam Movie Review
படத்தில் சிறப்பானவை
➡விமல் மற்றும் ஸ்ரேயா சரணின் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡காமெடி காட்சிகள்
➡பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡பலவீனமான காதல் காட்சிகள்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2.5 / 5 )





































