ஆன்டி இண்டியன் படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் மும்முரம்
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான படம் ஆன்டி இண்டியன். யூடியூப் சேனல் சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார். இந்த படத்தில் ராதாரவி, ஆடுகளம் நரேன், இயக்குனர் வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறி மரணித்த ஒருவரின் இறுதிச்சடங்கு எந்த அளவுக்கு மதரீதியான, அரசியல் ரீதியான பிரச்சனைகளை உருவாக்குகிறது என்பதை…