ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தாய்மை தவம்.. குழந்தை வரம்… அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ரஞ்சித் மேற்கொண்டிருக்கிறார். தாய்மை அனுபவத்தை ஏற்க தயாராகும் மூத்த பெண்மணி…