ஏப்ரல் 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், “ஹனுமான்” திரைப்படம் !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள பதிப்புகளை ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது. அதிரடி ஆக்சன், பொழுதுபோக்குடன் பக்தியும் கலந்த, இந்த சூப்பர் ஹீரோ என்டர்டெய்னர், பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா உடைய சினிமா யுனிவர்ஸின் முதல் படைப்பாகும். ‘ஹனுமான்’ படத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில்…

Read More

ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது……

Read More

சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது!

‘ஹனுமான்’ திரைப்படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. அகண்ட பாரதத்தின் இதிகாசத்திலிருந்து ஈர்க்கப்பட்டு இந்த முன்னோட்டத்தின் முதல் காட்சி- அஞ்சனாத்திரி இடம் பெற்றிருப்பது, நம்மை கற்பனை பிரபஞ்சத்திற்குள் அழைத்துச் செல்கிறது. தண்ணீருக்கடியில் நடக்கும் காட்சியில் கதாநாயகன் ஒரு நட்சத்திரம் போல் ஜொலிக்கும் முத்து ஓட்டின் அருகில் செல்வதை காட்சிப்படுத்துகிறது. ‘யதோ தர்ம ததோ ஹனுமா.. யதோ ஹனுமா ததோ ஜெய..’ (எங்கே நீதி இருக்கிறதோ. ….

Read More