அருண் விஜய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

தமிழ் திரையுலகில் கால் பதித்து, பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும், BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். BTG Universal நிறுவன தலைவர் திரு.பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, BTG Universal நிறுவன தலைமை திட்ட இயக்குநர் டாக்டர் M.மனோஜ் பெனோ அனைத்து நிர்வாக பணிகளைகளையும் செய்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் துவக்கவிழா,…

Read More

“தனலட்சுமியை பிடிக்குமா ? வளர்மதியை பிடிக்குமா ?” ; மேடையிலேயே பார்த்திபனிடம் கேள்வி கேட்ட தேவயானி

கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல படங்களின் பட்டியலில் ‘அழகி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.. கடந்த 2022ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29) திரையரங்குகளில்…

Read More

‘ரெபல்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., ஸ்டுடியோ கிரீன்…

Read More

‘ஹன்சிகா’ நடிப்பில் மார்ச்-8-ஆம் தேதி மிரட்டலாக வெளியாகும் ‘ கார்டியன்’

தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன. இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன்,ஸ்ரீமன், அபிஷேக் வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ராஜேந்திரன்,பிரதீப் ராயன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை…

Read More

(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர். திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு…

Read More

காதலர் தின வாழ்த்துக்களுடன் ராமம் ராகவம் படத்தின் கிளிம்ஸ் வெளியானது

சமுத்திரக்கனி, மற்றும் தன்ராஜ் கொரானானி நடிப்பில் ராமம் ராகவம் படத்தின் வீடியோ கிளிம்ஸ் வெளியானது. இந்த வீடியோவில் ஒரு தந்தை-மகன் இருவருக்கும் இடையிலான பாசத்தை வெளிக்காட்டும் விதமாக இருக்கிறது. ‘ஹேப்பி வாலண்டைன்ஸ் டாடி’ என்ற டேக்லைனுடன் வீடியோ முடிகிறது. இந்த ராமம் ராகவம் படத்தின் மூலம் நடிகர் தன்ராஜ் இயக்குநராகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், ப்ருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி போன்ற நடிகர்கள் உள்ளனர். அருண் சிலுவேரா…

Read More

மெரி கிறிஸ்துமஸ் பத்திரிகையாளர் சந்திப்பு

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள்…

Read More