எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் “கிக்”.
” எனக்கு காமெடி படங்கள் ரொம்பவும் பிடிக்கும். நான் எடுத்த பத்து படங்களிலும் காதலும், காமெடியும் அதிகமாக இருக்கும். வாழ்க்கை நமக்கு பல கஷ்டங்களை கொடுத்துட்டே இருக்கும். நம்மை அதிலிருந்து விடுவிக்கிறது காமெடி தான். இன்னிக்கும் பாருங்க, சார்லி சாப்ளினுக்கு இணையாக ஒருத்தரை கண்டுபிடிக்கவே முடியலை. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நகைச்சுவையோடு பார்க்க ஆரம்பிச்சிட்டால் நாம் எல்லோரும் தப்பிச்சிடலாம்னு தோணும். நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா…