KENNEDY CLUB MOVIE REVIEW

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துள்ளது. அந்த வகையில் கபடியை மையமாக வைத்து கில்லி, வெண்ணிலா கபடி குழ, வெண்ணிலா கபடி குழு 2 என்று ஒரு சில படங்கள் வந்துள்ளது. அப்படி முழுக்க முழுக்க பெண்களின் கபடியை வைத்து வெளியாகி இருக்கின்ற கென்னடி கிளப் படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம்

கதைக்களம்
திண்டுக்கல் ஒட்டஞ்சத்திரத்தில் முன்னாள் கபடி பயிற்சியாளராக இருந்து அந்த
ஊரில் உள்ள பெண்களுக்கு கபடி பயிற்சிகளை கொடுத்து வருகிறார் பாரதிராஜா அவர்கள். ஒரு கட்டத்தில் பாரதிராஜா அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. ஆகையால் பெண்களுக்கு பயிற்சி கொடுக்க பாரதிராஜாவின் சிஷ்யனாக வந்து களமிறங்கிறார் சசிகுமார். இதற்கு பிறகு பெண்கள் கபடியில் தொடர்ந்து தேர்ச்சி பெறுகிறார்கள். முக்கியமாக இந்தியா அளவிலான கபடியில் பெண்கள் கலந்து கொள்ளும் போது என்ன மாதிரியான விளையாட்டு அரசியல் நடக்கிறது என்பதையும், கடைசியில் வெற்றி பெற்றார்களா இல்லையா? என்பதே படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல்
இயக்குனர் சுசீந்திரன் அவர்களுடைய படங்களில் முக்கால்வாசி விளையாட்டை மையப்படுத்திதான் இருக்கும் அதேபோல் இந்த படத்தில் ஆண்களுக்கு பதிலாக பெண்களின் கபடியை மையமாக இயக்கிருப்பதால் பாராட்டுகளை தெரிவித்தாக வேண்டும். வழக்கம் போல் விளையாட்டில் இருக்கும் அரசியல் பற்றி பேசியிருந்தாலும் படம் முழுவதும் எந்த இடத்திலும் நமக்கு சலிப்பு தட்டவில்லை.

படத்தில் நடித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, சசிகுமார், சூரி, மீனாட்சி, முரளி சர்மா மற்றும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக, சூரி ஒரு காட்சியில் மட்டும் கபடி பயிற்சியாளராக வந்திருந்தாலும் நம்மை ரசிக்க வைத்துள்ளார்.

படத்தில் வசனங்கள் அங்கங்கே தாக்கத்தை எற்படுத்தியுள்ளது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், சசிகுமாரின் வசனங்கள் நம்பிக்கை என்னும் வார்த்தையை நமக்குள் கடந்து செல்ல வைக்கின்றது.
கடைசி தீ குச்சி ஏத்துறதில் இருக்கும் கவனம், முதல் குச்சியிலும் இருக்கணும், மற்றும் அனுபவம் மாதிரி அட்வைஸ் இருக்காது என்று சொல்லும் இடங்களில் அருமை.

படத்தில் நிஜ வீராங்கனை முதல் ஹீரோ ஏன்றால், இரண்டாவது நாயகனாக D இமான் பின்னணி இசையில் நம்மை பிரமிக்க வைக்கிறார்.

காட்சி படுத்திய விதத்தில் எல்லோரும் பிடித்த காட்சியாக கபடி இருந்தது. பெண்கள் கபடி விளையாடும் போது நமக்கு நேரலையில் கபடி பார்த்த அனுபவம் கொடுத்திருக்கிறது. படத்தின் கதை மற்றும் திரைக்கதை மூலம் படத்தின் தொகுப்பை சிறப்பாக செய்துள்ளார் எடிட்டர் ஆன்டனி.

படத்தின் பலம்
நிஜ வீராங்கனைகளின் நடிப்பு மற்றும் கபடி, பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் தரம்.

மொத்தத்தில் விளையாட்டை விரும்பும் மனிதர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பார்க்கக்கூடிய படமாக கென்னடி கிளப் அமைந்துள்ளது.





YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here