Bigg Boss நாள் 2 : நிஷா அக்கா சிங்கப்பெண். அனிதா சம்பத் நீ யாருமா?

நேத்து Bigg Boss 2வது நாள். ப்ரோமோல காட்டுனது போல அனிதாக்கும், சுரேஷ் சக்ரவர்த்திக்கும் முட்டிக்கிச்சு. இதுனால அழகி அனிதா ரசிகர்கலாம் ஒனிடா மண்ட மேலே காண்டாய்ட்டாங்களாம்.இந்த ஒனிடா மண்டை வார்த்தை நாங்க சொல்லல கடுப்புல அனிதாயியன்ஸ் சொல்றாங்க. பொதுவா ஒரு நியாயத்தை பேசலாமே, ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க திண்ணையில போறவனுக்கு திடுக்குனு வாழ்வு வந்துச்சாம்ன்னு, அப்டி தான் ஒரு நாள் நைட்ல பேமஸ் ஆனாங்க அனிதா. ஆனா ஒனிடா மண்ட அப்டி இல்லை. ஆயிரம் தான் இருந்தாலும் ஒனிடா அனிதாவுக்கு சீனியர் கூட இல்லை சூப்பர் சீனியர். அப்டி இருக்க அந்த பெரிய மனுஷன அனிதா கலாய்க்கலாமா? னு ஒரு கேள்வி. சரி Bigg Boss வீட்டுக்குள்ள எல்லாரும் ஒண்ணுனு கூட வச்சுக்கலாம்.இதே மாரி நாளைக்கு அனிதா வேலைபாக்குற ஆபீஸ்ல நேத்து வந்த ஒரு பொண்ணு அவுங்கள “எல்லாரு முன்னாடியும்” வச்சு கலாய்ச்சா ஒத்துப்பாங்களா. சரி அத விடுங்க எல்லாரும் தான் அந்த ஷோவ பாக்குறோம், மொட்ட என்ன சொன்னாப்ல? எல்லா நியூஸ் ரீடரையும் அவரு சொல்லல, ஆனா அனிதா பொதுவா எல்லா நியூஸ் ரீடெரையும் அசிங்க படுத்துறாருனு சொல்லிட்டாங்க. எது எப்டியோ “நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

இன்னொரு பக்கம் வேல்முருகன் அண்ணனோட கதை. சொந்த ஊறவிட்டு சென்னை ல இருக்குற எல்லாருக்கும் கண் கலங்கிரும். அப்புறம் அம்மாவ நெனச்சு அவரு பாடுன பாட்டு சொல்ல வார்த்தைகளே இல்ல.. அவ்வளவு அருமை. க்ஷணம் அவுங்க கடந்து வந்த, விட்டுட்டு வந்த பழையவைகள பேசுனாங்க. அவுங்க சுயம் எப்படினு தெரில பட் அந்த கிரிட்டிகளான ஸ்டேஜ் ஆஹ் அவுங்க கடந்துவந்தது ஒரு இன்ஸ்பிரேஷன் தான்

Read Bigg Boss Day 1 Highlights here

நிஷா அக்கா.. யக்கோவ் உங்கள நாங்க இப்படி பாத்தது இல்லையே கா.. ஒவ்வரு சிரிப்பு கலைஞனுக்கு பின்னாலயும் ஒரு மிக பெரிய வலி இருக்கு. நிஷா அக்கா அழுகையும் கண்ணீரும் கண்டிப்பா பார்வையாளர்களை பாதிச்சுருக்கும். நிஷா அக்கா மாதிரி பொண்ணுக நிச்சயம் எல்லாருக்கும் ஒரு உதாரணம் தான்.

Bigg Boss show பத்துன உங்களோட கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுகின்ற. மேலும் Bigg Boss பத்தின கட்டுரைக்கு தமிழ்ப்படத்தோட இணைந்திருங்க.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here