பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நாயகனாகும் புதிய திரைப்படம் “யதா ராஜா ததா ப்ரஜா” இனிதே ஆரம்பமானது !!

‘சினிமா பண்டி’ புகழ் விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்குகிறார். Om Movie Creations & Sri Krishna Movie Creations பேனர்களின் கீழ் ஸ்ரீனிவாஸ் விட்டலா மற்றும் ஹரேஷ் படேல் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

ஹீரோ ஷர்வானந்த் கிளாப் அடிக்க, சல்மான் கானின் மருமகன் ஆயுஷ் ஷர்மா ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் கருணாகுமார் முதல் காட்சியை இயக்கினார்.

இந்த விழாவில் இயக்குநர் – தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் விட்டலா பேசுகையில், “கதை, திரைக்கதை, வசனம் எழுதுவது மட்டுமின்றி, ஹரேஷ் படேலுடன் இணைந்து இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன். கதையை முடித்த பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தைத் தேடும் முயற்சியில் இருந்தோம், அந்த நேரத்தில் ஜானி மாஸ்டருடன் பழகினேன். மாஸ்டர் அவருக்கென ஸ்கிரிப்ட்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். 20 நிமிடங்களில் நான் சொன்ன கதையின் மையப் புள்ளி மிகவும் பிடித்து போக, எங்கள் ஸ்கிரிப்டை அவர் ஓகே செய்தார். முன்பு அரசியல் செய்திகள் எந்தச் சேனலிலும் 10 நிமிடங்களுக்கு மேல் இருந்தது இல்லை, ஆனால் இப்போது அவை 24/7 இடம்பெறுகின்றன. அனைவரும் அரசியலில் ஆர்வம் காட்டுகிறார்கள். எங்கள் படம் வணிக பொழுதுபோக்கு & சமூக செய்திகள் நிறைந்த அரசியல் டிராமாவாக இருக்கும், இப்படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் 15ல் துவங்கி மூன்று கட்ட படப்பிடிப்பில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெறவுள்ளன.

ஜானி மாஸ்டர் கூறுகையில்,
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளில் எங்கள் படத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஸ்ரீனிவாஸ் விட்டலா சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடனம் மற்றும் விளம்பரங்களுக்கு மேலாக எனது அடையாளத்தை வளர்க்க, இதுபோன்ற ஒரு நல்ல கதையுடன் அடுத்த கட்டத்திற்கு வர முடிவு செய்துள்ளேன். நான் ‘சினிமா பண்டி’யைப் பார்த்தேன், அதில் விகாஸின் நடிப்புப் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தின் தலைப்பு ‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்பது எழுத்தாளர் நரேஷ் காரின் யோசனை, இந்த நல்ல தலைப்பை வழங்கிய அவருக்கு நன்றி. நாங்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தைக் கொண்டு வருகிறோம். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு எங்களை ஆசிர்வதித்த ஹீரோ ஷர்வானந்த், ஆயுஷ் ஷர்மா ஆகியோருக்கு ஸ்பெஷல் நன்றி. நேற்று ஆயுஷ் ஜியுடன் ஒரு பாடலை இப்படத்துக்காக முடித்துள்ளேன்.

சினிமா பண்டி புகழ் விகாஸ் கூறுகையில்,
ஜானி மாஸ்டருடன் இணைந்து பணிபுரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது போதுமான கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய நல்ல அரசியல் டிராமாவாக இருக்கும். இது நகைச்சுவை, நையாண்டிகள், சமூக செய்திகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒரு முழு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என்றார்.

நடன இயக்குனர் கணேஷ் மாஸ்டர் பேசுகையில்,
“யதா ராஜா ததா ப்ரஜா” படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். படம் பிளாக்பஸ்டராக மாற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த சிறந்த வாய்ப்பை எங்கள் அண்ணன் ஜானிக்கு வழங்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தின் இசை பாடல்கள் இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமையும்.

இசையமைப்பாளர் ரதன் கூறுகையில், “பாடல்களை ஒரு நல்ல டான்ஸ் மாஸ்டர் சிறந்த அனுபவமாக மாற்றிவிடுவார். ஆச்சர்யமாக எங்கள் படத்தில் ஜானி மாஸ்டர் நாயகனாக நடிக்கிறார். எனது குழுவினர் எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்து வருகின்றனர், ஆல்பம் மிகச் சிறப்பாக, வந்துள்ளது.


ஒளிப்பதிவாளர் மனோஜ் வேலாயுதன் கூறுகையில்..
நான் கேரளாவைச் சேர்ந்தவன். சில மாதங்களுக்கு முன்பு ஜானி மாஸ்டரை சந்தித்தேன். இந்தப் படத்தைப் பற்றி அவர் என்னிடம் கூறினார். நான் ஹைதராபாத் வந்தவுடன், ஸ்ரீனிவாஸ் விட்டலா காரு எனக்கு முழுக் கதையையும் விவரித்தார், மிகவும் பிடித்திருந்தது. ஒரு குழுவாக சிறப்பான படைப்பை தருவோம் என நம்புகிறேன்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்:

பேனர்: Om Movie Creations & Sri Krishna Movie Creations
தயாரிப்பாளர்கள்: ஸ்ரீனிவாஸ் விட்டலா, ஹரேஷ் படேல்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஸ்ரீனிவாஸ் விட்டலா
ஒளிப்பதிவாளர்: மனோஜ் வேலாயுதன்
இசையமைப்பாளர்: ரதன்
கலை இயக்குனர்: பாபா
போஸ்டர் வடிவமைப்பாளர்: தானி ஏலே
நிர்வாக மேலாளர்: S.ரங்க பாபு
மக்கள் தொடர்பு: புலகம் சின்னராயா

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here