மணிரத்னம் இயக்கிய இந்த 26 படங்களும் வரிசையாக ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் !!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் ’பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னட திரைப்படத்தை கடந்த 1983ஆம் ஆண்டு இயக்கினார். இதன்பிறகு ’உனரு’ என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கியவர், தமிழில் ’பகல் நிலவு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்

Mani Ratnam - Wikipedia

அதன் பின்னர் ’இதயகோயில்’ ’மௌன ராகம்’ ’நாயகன்’ ’அக்னி நட்சத்திரம்’ ’தளபதி’ ’ரோஜா’ உள்பட மொத்தம் இதுவரை அவர் 26 திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும், மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அவரது 27 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Every Mani Ratnam Film, Ranked

இந்த நிலையில் மணிரத்னம் ஏற்கனவே இயக்கிய 26 படங்களும் டிஜிட்டலில் மாற்றப்பட உள்ளதாகவும் இது குறித்த பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மணிரத்னம் இயக்கிய இந்த 26 படங்களும் வரிசையாக ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் மணிரத்னம் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

Happy Birthday Mani Ratnam: Why he will remain in history of South Indian  cinema as the greatest filmmaker - Pinkvilla - Features

மணிரத்னம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரம்பிரபு, ஜெயராம், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Mani Ratnam admitted to hospital due to cardiac problem for fourth time
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here