பரபரப்பாக நடக்கும் அண்ணாத்த டப்பிங் – இது அண்ணாத்த தீபாவளி !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் தான் ’அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இந்த படத்தில் தனது பகுதி டப்பிங் பணியை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முடித்தார். தற்போது அந்த படத்தில் நடித்த ஒரு கதாநாயகி அவங்களுடைய டப்பிங் பணியை நிறைவு செய்திருக்கிறார்கள்.

Rajinikanth's Annaatthe shooting to be wrapped up soon! | Tamil Movie News  - Times of India

அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மீனா தன்னுடைய பகுதி டப்பிங் பணியை தொடங்கி உள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Annaatthe': Rajinikanth to pen his own punch dialogues in the film | Tamil  Movie News - Times of India

ரஜினி, மீனாவை அடுத்து குஷ்பூ உள்பட இந்த படத்தில் நடித்த அனைவரும் தங்களது பகுதியின் டப்பிங் பணிகளை முடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ’அண்ணாத்த’ திரைப்படம் ஏற்கனவே தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Rajinikanth to join the sets of 'Annaatthe' in January 2021 | The News  Minute

இந்த தீபாவளி அண்ணாத்த தீபாவளி என்று ரசிகர்கள் மார்தட்டிக்கொண்டு சொல்கிறார்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். மேலும் சினிமா குறித்த தகவல்களுக்கு தமிழ் படத்தை பின்தொடருங்கள்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here