நிழல் (2026) – முன்னோட்டம்
பிக்பாஸ் புகழ் ஜனனி குணசீலன், ஸ்ரீ விஸாகன், கௌசிக் கோபாலன் நடிப்பில், ஏ.கே.குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு க்ரைம், டிராமா, த்ரில்லர் திரைப்படம் தான் இந்த ‘நிழல்’.

நிழல் கதை
ரம்யா மற்றும் சரண்யா என்ற இரட்டை சகோதரிகளின் எளிய வாழ்க்கையைச் சுற்றிதான் கதை நகர்கிறது. இவர்களது தோழி லட்சுமி, ஒரு பெரும் நிறுவனத்தின் சிஇஓ-வின் (CEO) மகனாலும் அவனது நண்பர்களாலும் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள். இந்த தாக்குதலில் இருந்து ரம்யா தப்பித்தாலும், தன் தோழிக்கு நேர்ந்த அநீதிக்காக சரண்யா பழிவாங்கத் துடிக்கிறாள்.

ரம்யாவின் காதலனான ரகு (விஸாகன்) ஒரு உயர் காவல் அதிகாரியாக இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார். சட்டம், காதல், தனிமனித நீதி ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் போராட்டமே ‘நிழல்’ படத்தின் மீதிக்கதை.

‘நிழல்’ – பிக்பாஸ் ஜனனியின் ஆக்ஷன் மற்றும் எமோஷனல் நடிப்பிற்காகவும், விறுவிறுப்பான 100 நிமிட திரைக்கதைக்காகவும் தியேட்டரில் ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம். ஒரு சுமாரான பட்ஜெட்டில் உருவான நல்ல க்ரைம் த்ரில்லர் முயற்சி!
Read Also: Charukesi Movie Review
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡பிக்பாஸ் ஜனனியின் ஆக்ஷன் அவதாரம்
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡கச்சிதமான படத்தின் நீளம்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡குறைந்த பட்ஜெட் தயாரிப்பு
➡மற்றும் மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2.5 / 5 )


























