தாய்நிலம் தமிழ் திரைப்பட விமர்சனம்

தாய்நிலம் (2026) – முன்னோட்டம்

இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவன் இயக்கத்தில், டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடித்துள்ள ‘தாய்நிலம்’ (Thaainilam) திரைப்படத்தின் திரை விமர்சனம்

தாய்நிலம் கதை

2008-ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் பின்னணியில் கதை தொடங்குகிறது. போரில் தன் மனைவியை இழக்கும் சேதுராமன் (அமர் ராமச்சந்திரன்), தன் சிறு வயது மகள் தமிழினியை (நேஹா அமர்) எப்படியாவது உயிரோடு காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கடல் வழியே தப்பித்து தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதிக்கு அகதியாக வந்து சேர்கிறார்.

புதிய இடம், அறிமுகமில்லாத மனிதர்கள், வாழ்வாதாரப் போராட்டம், சமுதாயத்தின் பார்வை எனப் பல சவால்களுக்கு நடுவில், தன் மகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகப் போராடும் ஒரு தந்தையின் வலியும் பாசமுமே ‘தாய்நிலம்’ படத்தின் மீதிக்கதை.

வணிக ரீதியான ஆடம்பரங்கள் எதுவுமின்றி, போர் மற்றும் இடம்பெயர்வின் வலியை எதார்த்தமாகவும் ஆழமாகவும் பேசும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மனிதநேயப் படைப்பாக ‘தாய்நிலம்’ அமைந்திருக்கிறது.

Read Also: All Pass Movie Review

படத்தில் சிறப்பானவை

➡உணர்ச்சிப்பூர்வமான கதைக்களம்
➡முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டாக்டர் அமர் ராமச்சந்திரன் மற்றும் மகளாக நடித்துள்ள நேஹா அமர் இருவரும் தந்தை–மகள் இடையேயான அன்பையும் ஏக்கத்தையும் இயல்பான நடிப்பால் மிக அழகாகக் கடத்தியுள்ளனர்.
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡வசனம் & ஒளிப்பதிவு
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡மெதுவான திரைக்கதை
➡வழக்கமான சில காட்சிகள்

ரேட்டிங்: ( 3 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஆல் பாஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைதி சோஷியல் ரெக்கனிங் தமிழ் திரைப்பட விமர்சனம்