நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்து பா.இரஞ்சித்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினி.

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பல்வேறுதரப்பட்ட மக்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.

துஷாரா, காளிதாஸ்ஜெயராம், கலையரசன், ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பார்த்துவிட்டு இயக்குனர் பா.இரஞ்சித்தை அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

“உங்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படம் நட்சத்திரம் நகர்கிறது படம்தான்.
நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை , கலை இயக்கம் என அனைத்தும் மிகச்சிறப்பு , எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு, நான் மிகவும் ரசித்தேன்.
குறிப்பாக எனது ஆரம்பகால நாடக வாழ்க்கையையும் எனக்கு ஞாபகப்படுத்தியது இந்தபடம்.

நாடக நடிகராக என்னால் இந்த படத்தில் எளிதாக ஒன்றிப்போக முடிந்தது, என்று தனது நாடககால வாழ்வின் நினைவுகளையும் பகிர்ந்துகொண்ட சூப்பர்ஸ்டார்
குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ” என்று தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் ரஜினி.

சூப்பர்ஸ்டாரிடமிருந்து கிடைத்த பாராட்டில் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here