கர தமிழ் திரைப்பட விமர்சனம்

போர் தொழில் என்கிற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவர் விக்னேஷ் ராஜா. இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கர. இப்படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ், கருணாஸ் என பலரும் நடித்துள்ளனர். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் விக்னேஷ் ராஜா, கர படத்தில் நம் அனைவரையும் மீண்டும் ஆச்சரியப்படுத்தியுள்ளாரா என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

கர கதை

தனுஷ், ப்ரித்வி இரண்டு பேருமே படத்தின் முதல் காட்சியிலேயே இரு MLA வீட்டை திருட செல்கின்றனர். அதில் தனுஷ் மட்டும் மாட்டுகிறார், அவர் மாட்டும் ஸ்டேஷனில் உயர் அதிகாரியாக இருக்கும் சுராஜ் தனுஷ் மீது நிறைய கேஸ்களை போட்டு தனக்கு பப்ளிச்சிட்டி கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார்.

இதை அறிந்த தனுஷ் சுராஜை அடித்து, அங்கிருந்து தப்பித்து ரேணிகுண்டா சென்று மமிதா பைஜுவுடன் வாழ்ந்து வருகிறார், ஆனால் கஷ்டம் அவரை விட்டு வைக்கவில்லை, இதனால் மெஸ் ஆரம்பிக்க முடிவு செய்கிறார்.

இதனால் தன் சொந்த ஊருக்கு வந்து தன் அப்பா கே எஸ் ரவிகுமாரிடம் நிலத்தை விற்று பணத்தை கேட்க, பிறகு தான் தெரிகிறது, அவரே நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து தான் ட்ராக்டர் வாங்கியுள்ளார் என்பது.

ஒரு கட்டத்தில் வாங்கிய கடனுக்காக நிலத்தை பேங்க் ஜப்தி செய்ய, கே எஸ் ரவிகுமார் இறந்து போக, தன் அப்பாவை தன்னுடைய நிலத்தில் அடக்கம் செய்ய வங்கி மறுக்க, இப்படி எல்லா திசைகளிலும் தனுஷை சூழ்நிலைகள் நெருக்க, பிறகு தனுஷ் எடுக்கும் அதிரடி முடிவுகளே மீதிக்கதை.

படத்தில் சிறப்பானவை

➡தனுஷ் மற்றும் நடிகர்கள் பங்களிப்பு
➡1990-ல் நடப்பது என்பதால் செட் பல காட்சிகள் என்றாலும், அதை ரியல் ஆக படம்     பிடித்து காட்டியுள்ளனர்
➡சிறப்பான இரண்டாம்பாதி
➡ஒளிப்பதிவு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡சண்டைக்காட்சிகள்

படத்தில் கடுப்பானவை

➡படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்
➡படத்தின் நீளம்

ரேட்டிங்: ( 3 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஹாப்பி ராஜ் தமிழ் திரைப்பட விமர்சனம்