ட்ரோன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

ட்ரோன்ஸ் (2026) – முன்னோட்டம்

இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ‘பரிதாபங்கள்’ புகழ் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், சித்தி இத்னானி, தேவதர்ஷினி மற்றும் கே.பி.ஒய் குறைஷி நடிப்பில் அறிவியல் புனைகதை மற்றும் ஹாரர்-காமெடி (Sci-Fi Fantasy Horror-Comedy) பாணியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’.

ட்ரோன்ஸ் கதை

கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் (டிராவிட், தீபக் மற்றும் அஞ்சலி) ஒரு மர்மமான விஞ்ஞானியின் வீட்டில் அடைக்கலம் புகுகின்றனர். அந்த வீட்டில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள், ஒரு குறுஞ்சிலைக் கலைஞர் (Miniature Artist), ஒரு சூனியக்காரி (Devadarshini) மற்றும் பொம்மை வீட்டிற்குள் (Dollhouse) அடைபட்ட ஆன்மாக்கள் என கதை முற்றிலும் வேறு ஒரு கற்பனை உலகத்திற்கு நகர்கிறது. அறிவியலும் மாயாஜாலமும் மோதிக்கொள்ளும் இந்த மர்ம பின்னணியிலிருந்து நாயகனும் அவனது நண்பர்களும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

சில திரைக்கதை சுணக்கங்கள் இருந்தாலும், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் செல்லும் ரசிகர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஜாலியான மாயாஜால அனுபவத்தைக் கொடுக்கும் படமாக ‘ட்ரோன்ஸ்’ அமைந்துள்ளது.

Read Also: Jailer 2 Movie Review

படத்தில் சிறப்பானவை

➡வித்தியாசமான கதைக்களம்
➡டிராவிட் செல்வம் மற்றும் தீபக்கின் டைமிங் காமெடி படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡காமெடி
➡ஒளிப்பதிவு & பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
➡மெதுவான ஆரம்பம்

ரேட்டிங்: ( 2.75 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஜெயிலர் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்