ஜெயிலர் 2 (2026) – முன்னோட்டம்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் – சூப்பர் ஸ்டார் ரஜினிகான் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஜெயிலர் 2 கதை
வர்மனை கொலை செய்தது யார்? கடத்தப்பட்ட சிலைகளின் மூன்று கண்டெய்னர்கள் யாரிடம் உள்ளது என்பதை கல்பக் குடும்பத்தினர் (எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவத்தி) வர்மனின் நண்பன் திலீப் (சுராஜ்) மூலம் தேடி வருகிறார்கள். இவர்களின் தேடல் ஒரு பக்கம் நடக்க, தன்னை சுற்றியும், தன் குடும்பத்தை சுற்றியும் ஏதோ தவறாக நடப்பதை உணரும் டைகர் முத்துவேல் பாண்டியன், தன்னை தேடுபவர்கள் தன் குடும்பத்தை நெருங்குவதற்கு முன், நாம் அவர்களை நெருங்க வேண்டும் என திட்டமிடுகிறார்.

ரஜினியின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக நடக்க, ஒரு கட்டத்தில் சுராஜ் இடத்திற்கே சென்றுவிடுகிறார். சுராஜை வைத்து கல்பக் குடும்பத்தை கண்டுபிடித்து, இந்த நெட்வொர்க்கில் இருக்கும் அனைவரையும் முடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.ஆனால், ரஜினி நெருங்குவதற்குள் சிவராஜ் குடும்பத்தை எஸ்.ஜே. சூர்யா கடத்தி விடுகிறார். இப்படியொரு சிக்கல் ஏற்பட்டதால், தமிழ்நாட்டிலிருந்து கோவாவிற்கு, அதாவது கல்பக் குடும்பம் இருக்கும் இடத்திற்கு செல்கிறார். சிவராஜ் குடும்பத்தை ரஜினி காப்பாற்றினாரா? இந்த சிக்கலில் இருந்து ரஜினி எப்படி தப்பித்தாரா? மொத்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாரா இல்லையா? இதற்கிடையில் அவர் சந்தித்த சவால்கள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.

சில திரைக்கதை பலவீனங்கள் இருந்தாலும், நெல்சனின் காமெடி, அனிருத்தின் வெறித்தனமான இசை மற்றும் ரஜினிகாந்தின் அளப்பரிய மாஸ் அவதாரம் படத்தைக் குடும்பத்தோடு தியேட்டரில் ரசித்து பார்க்கும் ஒரு பக்காவான கமர்ஷியல் எண்டர்டெய்னராக மாற்றியுள்ளது.
Read Also: All Pass Movie Review
படத்தில் சிறப்பானவை
➡ரஜினிகாந்தின் ஸ்கிரீன் பிரசென்ஸ்
➡நெல்சன் மார்க் காமெடி
➡கேமியோ மற்ற அனைவரின் நடிப்பு
➡அனிருத்தின் பின்னணி இசை
➡இன்டர்வல் & கிளைமேக்ஸ்
படத்தில் கடுப்பானவை
➡இரண்டாம் பாதித் தொய்வு
➡முன்கணிக்கக்கூடிய திரைக்கதை
ரேட்டிங்: ( 3.75 / 5 )





































