ரணபலி (2026) – முன்னோட்டம்
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ரணபலி’ (Ranabaali) திரைப்படத்தின் தமிழ் விமர்சனம் இதோ
ரணபலி கதை
ஆந்திராவில் சிங்கனமலயின் உச்சில் உள்ள குகையில் பத்ர மல்லனா என்ற சித்தர் ஜீவசமாதியாகிருக்கிறார். 1854யில் அந்த குகைக்கு கர்ப்பிணி பெண்ணாக வரும் ராஜம்மா (ஈஸ்வரி ராவ்) குழந்தையை பெற்றெடுக்கிறார்.ஆனால் அந்த குழந்தை உடல் அசைவின்றி இருக்கும்போது, குகைக்குள் இருந்து பத்ர மல்லனா சித்தர் வெளியே வருகிறார். குழந்தையை உயிர்ப்பிக்க வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது என்று அவர் கூற, ராஜம்மாவும் அதற்கு சம்மதிக்க அந்த குழந்தை உயிர்பிரித்ததும் ரணபாலி என சித்தர் பெயர்சூட்டுகிறார்.

ரணபாலி (விஜய் தேவரகொண்டா) முரட்டுத்தனமான கோபக்கார இளைஞனாக வளர, அவருக்கு ஜெயம்மாவுடன் திருமணம் நடக்கிறது. அதே சமயம் பிரிட்டிஷின் ஆட்சியில் இந்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதியில் மக்கள் அடிமைகளாக இருக்க, மெட்ராஸ் பிரெசிடென்ஸின் கமிஷனராக இருக்கும் தியோடோர் ஹெக்டர் ஆந்திர பிரதேசத்தின் ஊர்களுக்கு பயணிக்கிறார்.மக்களை அடிமைகளாக வேலைவாங்கி நெல், தானியங்களை மூட்டை மூட்டையாக சேர்க்கும் ஹெக்டர், ஒரு கைப்படி நெல்லும் பிரிட்டிஷிற்கே சொந்தம் எனக் கூறி அராஜகம் செய்கிறார். தானியங்களை மெட்ராஸ் துறைமுகத்திற்கு கொண்டுவர ரயில் பாதையை தயார் செய்ய வேண்டும் என்பதால், பெரும் பஞ்சத்தை ஏற்படுத்துகிறார் ஹெக்டர்.
அதனால் பசியால் இடம்பெயரும் மக்களை வேலைக்கு உணவு என்று கூறி அழைத்து வந்து அவர்களை பிரிட்ஷ் ஆட்சியாளர்கள் அடிமைகளாக நடத்துகின்றனர். இந்த சூழலில் தனது ஊரில் செழிப்பாக வாழும் ரணபாலிக்கு, மக்கள் பலர் அடிமைகளாக நடத்தப்படுவது தெரிய வந்து வெகுண்டெழுகிறார்.தனியாளாக பிரிட்டிஷ் அரசை எதிர்க்க களமிறங்கிய ரணபாலி, ஹெக்டரின் அராஜகத்திற்கு முடிவு கட்டினாரா? மக்கள் பஞ்சத்தில் இருந்து மீண்டார்களா? என்பதே மீதிக்கதை.

‘ரணபலி’ – ஒரு வரலாற்று பின்னணியிலான கதையைக் களமாகத் தேர்ந்தெடுத்த முயற்சி நன்று. விஜய் தேவரகொண்டாவின் கடின உழைப்பும் பிரமாண்டமான உருவாக்கமும் படத்திற்குப் பலம் என்றாலும், சுவாரஸ்யமில்லாத மெதுவான திரைக்கதையால் பார்வையாளர்களுக்கு முழுமையான திருப்தியைக் கொடுக்கத் தவறுகிறது.
Read Also: Drones Movie Review
படத்தில் சிறப்பானவை
➡விஜய் – ராஷ்மிகா கெமிஸ்ட்ரி
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡விஜய் தேவரகொண்டாவின் உழைப்பு
➡பின்னணி இசை
➡பிரமாண்டமான தயாரிப்பு மேலாண்மை
படத்தில் கடுப்பானவை
➡பொறுமையை சோதிக்கும் திரைக்கதை & வேகம்
➡அதிகப்படியான வன்முறை
ரேட்டிங்: ( 2.75 / 5 )





































