கொன்றால் பாவம் தமிழ் திரைப்பட விமர்சனம்

கொன்றால் பாவம் கதை

1981 தர்மபுரியில் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு வீடு இருக்கிறது, அந்த வீட்டில் தாய் , தந்தை மற்றும் அவரின் மகள் வரலக்ஷ்மி என மூன்று பேர் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அச்சமயத்தில் அந்த வழியாக செல்லும் வழிப்போக்கன் ( சந்தோஷ் ) ஒருவன் இவர்களிடம் ஒருநாள் இரவு மட்டும் இவர்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறான்.

முதலில் அதனை மறுத்த இவர்கள் , பிறகு அவரை வீட்டில் தங்கவைக்க அனுமதிக்கின்றனர், பிறகு வரலக்ஷ்மி அவரை கொன்றுவிட்டு அவரிடம் இருக்கும் பணம், நகைகளை திருட திட்டம் தீட்டுகிறார். கடையிசில் வரலக்ஷ்மி நினைத்தபடி நடந்ததா ? இல்லையா அல்லது அன்று இரவு வீட்டில் தங்கிவிட்டு சந்தோஷ் பத்திரமாக சென்றாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த திரைப்படம் கன்னடாவில் வெளியான ஆ கரால ராத்திரி (Aa Karaala Ratri) என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த கதையினை இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதை
வித்யாசமான திரைக்கதை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
சாம் CS பின்னணி இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

சற்று மெல்ல நகரும் முதல் பாதி

Rating : ( 3.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *