மஞ்சு வாரியர் & சைஜு ஶ்ரீதரன் இணையும் ஃபுட்டேஜ் படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது !!

திருச்சூர் நகரின் மையப்பகுதியான சிம்னி அணைக்கு அருகில், பிரபல எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் இயக்குநராக அறிமுகமாகும் ஒரு புதிரான புதிய படமான “ஃபுட்டேஜ்’ படத்தினை புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர், ஸ்விட்ச்-ஆன் செய்து துவக்கி வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, முதல் ஷாட்டுடன் மிக இனிமையான நிகழ்வாக துவங்கியது.

“அஞ்சம் பாதிரா”, “கும்பளங்கி நைட்ஸ்,” மற்றும் “மஹேஷின்டே பிரதிகாரம்” போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் எடிட்டிங்கில் மூளையாக செயல்பட்டவர் சைஜு ஸ்ரீதரன். மிகப்பிரபலமான எடிட்டர் எனும் நிலையிலிருந்து, தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

இந்தியத் திரையுலகின் மிகப்பிரபலமான ஆளுமையாக விளங்கும் நடிகை மஞ்சு வாரியர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் இவருடன் விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர். மூவி பக்கெட், காஸ்ட் அண்ட் கோ மற்றும் பேல் ப்ளூ டாட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், பினீஷ் சந்திரன் மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். அனீஷ் C சலீம் லைன் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

ஷப்னா முஹம்மது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து, கூட்டு முயற்சியாக “ஃபுட்டேஜ்” படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவாளராக ஷினோஸ் பணியாற்ற, கலை இயக்குநராக அப்புண்ணி சாஜன் பணியாற்றுகின்றனர். மைண்ட்ஸ்டின் ஸ்டுடியோஸ் VFX பணிகளை கவனிக்க, சமீரா சனீஷால் உடை வடிவமைப்பு பணிகளையும், ஒலி வடிவமைப்பை நிக்சன் ஜார்ஜ் அவர்களும் செய்கின்றனர்.

இந்த திரைப்படம் ஃபவுண்ட் புட்டேஜை பயன்படுத்தி எடுக்கப்படுகிறது. திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இந்த முயற்சியானது, திரைப்படத்துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லாக இருக்கும். இந்த திட்டத்தினை சந்தீப் நாராயண் வடிவமைக்கிறார். அஸ்வெகீப்சர்ச்சிங் பாடல்களை வழங்க, சுஷின் ஷியாம் பின்னணி இசையை வடிவமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் அறிமுகமே ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்ததை அடுத்து, படம் தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், படத்தில் இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்குமோ என திரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க துவங்கிவிட்டனர். மஞ்சு வாரியரின் திரை ஆளுமை, சைஜு ஶ்ரீதரனின் அறிமுக இயக்கம் என இப்படம் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here