நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக  வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தன்னுடைய தேர்ந்த நடிப்புத்திறனாலும் , வசீகர அழகாலும் பல ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா, தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார்,  இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறார். இணை தயாரிப்பை  A வெங்கடேஷ் மேற் கொள்கிறார்.   டியூட் விக்கி எழுதி, இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன்  போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலானது.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தொகுப்பை ஜி.மதன் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

நடிகர்கள் – நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும்  பலர்

தொழிநுட்பக் கலைஞர்கள் விபரம்:

கதை & இயக்கம் – டியூட் விக்கி

இசை – ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர் ISC

படத்தொகுப்பு – ஜி.மதன்

கலை – மிலன்

ஆடை வடிவமைப்பு – அனு வர்தன்

ஆடை – பெருமாள் செல்வம்

ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார்

விளம்பர வடிவமைப்பு – கண்ணதாசன் டிகேடி

தயாரிப்பு  மேற்பார்வையாளர் – A P பால் பாண்டி.

தயாரிப்பு நிர்வாகி – ஷ்ரவந்தி சாய்நாத்

இணை தயாரிப்பாளர் – A.வெங்கடேஷ்

தயாரிப்பாளர்  – S. லக்ஷ்மன் குமார்

தயாரிப்பு நிறுவனம் – பிரின்ஸ் பிக்சர்ஸ்

மக்கள் தொடர்பு – சதீஷ் குமார்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here