‘பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா

” பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது. அவரை பொறுத்த வரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் முப்பதிற்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார். காந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவராக பிரபாசை சொல்லலாம். அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன்…

Read More

திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்

‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது…. “ ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும்…

Read More

‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா – இயக்குநர் கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் பாலையா..’ எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத- மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது….

Read More

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் பாஸ் பார்ட்டி லிரிக்கல் வீடியோ வெளியீடு

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெற்ற ‘பாஸ் பார்ட்டி..’ எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே. எஸ். ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் ‘வால்டேர் வீரய்யா’ திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில்…

Read More

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – மாஸ் மகாராஜா ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வால்டேர் வீரய்யா’ எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் ‘மெகா 154’ என பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட திரைப்படத்திற்கு, ‘வால்டேர் வீரய்யா’ என பெயரிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ‘வால்டேர் வீரய்யா’ எனும் டைட்டிலுக்கான டீசரை பட குழுவினர்…

Read More

’கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு இன்று பிறந்தநாள்

பிரஷாந்த் நீல். இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் டாப் டென் இயக்குநர்களில் தவிர்க்க முடியாத பெயர். இந்த ஒரே காரணத்துக்காக இன்றைய அவரது 41வது பிறந்த நாளை சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்து மழைகளால் பொழிந்துகொண்டிருக்கின்றனர். 1980 ஜூன் 4ம் தேதி பிறந்த பிரஷாந்த் நீல் இன்று எட்டிப்பிடித்திருக்கும் வெறுமனே மூன்றே படங்களில் நிகழ்ந்தது என்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். அவரது முதல் படமான ‘உக்கிரம்’ வெளியான ஆண்டு 2014. அதுவே மாபெரும் ஹிட் அடித்த…

Read More

‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கின் நாயகி இவரா⁉

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியினையடுத்து, தற்போது கோபிசந்த் இயக்கத்தில் ‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஆர்.டி.66’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் ஹீரோயினாக நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பலுபு’ என்ற படத்திற்கு பிறகு…

Read More