விக்ரமன் – மகிழ்திருமேனியின் இணை இயக்குனர் சி.எம் லோகு இயக்கிய படம் “பரபரப்பு”

ஒரு முன்னாள் அமைச்சர் அவர் வருமானவரித்துறையினருக்கு பயந்து பதுக்கி வைத்த 500 கோடி ரூபாயை ஒரு அரசியல் புரோக்கர் அவரிடம் காப்பாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறுகின்றனர். பின்பு பணத்தை பதுக்கி வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்களா ? இல்லை பணத்தை திருடி கொண்டு போனார்களா? என்பது தான் கதை. ஒரு சில சுயநல அரசியல்வாதிகளின் அராஜக போக்குகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமே பரபரப்பு என்கிறார் இயக்குனர்
சி.எம் லோகு.

விஜய் விஷ்வா, கில்மா கிரி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க நான்சி துபாரா, சிம்மு ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
ஆர்.சுந்தரராஜன், நாஞ்சில் சம்பத்,
பவர்ஸ்டார் சீனிவாசன், சிலுமிசம் சிவா, சக்தி, விஜி , வேங்கை மணவழகன், அபிநயா,ஜெய்பீம் சண்முகம், தீபிகா, அரக்கோணம் கே.பி.ஒய் சௌந்தரராஜன் மற்றும் ஆர்.கே கண்ணன், ஏ.எல்.ராஜா ஆகியோர் நடித்து நடித்துள்ளனர்.

கற்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.சோகன்லால்,
சி.எம்.. லோகு, எஸ்.கோபி நாயகன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் இயக்குனர்கள் திரு.விக்ரமன் திரு.மகிழ்திருமேனி ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய
சி.எம்.லோகு இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு-சங்கர் செல்வராஜ்.
கலை- அபிராஜன் சண்டை பயிற்சி- இடிமின்னல் இளங்கோ

தயாரிப்பு –
பி..சோகன்லால்
சி.எம்.லோகு
எஸ்.கோபி நாயகன்

கதை , திரைக்கதை ,வசனம் , பாடல்கள் ,இசை இயக்கம் -சி.எம.லோகு

இப்படத்தில் இனிமையான ஐந்து பாடல்களுடன் பரபரப்பான மூன்று சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இரண்டு கட்ட படப்பிடிப்பாக 35 நாட்களில் திருவள்ளூர் ,திருத்தணி,பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இடைவிடாது நடைபெற்று முடிவடைந்தது.

இதன் நிறைவுகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *