ஆண்ட்ரியா நடிப்பில் காட்டுக்குள் நடக்கும் சர்வைவல் திரில்லர் “நோ எண்ட்ரி” !!
ஜம்போ சினிமாஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் A. ஸ்ரீதர் தயாரிக்க, R.அழகு கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், வித்தியாசமான சயின்பிக்சன் சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “நோ எண்ட்ரி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு காட்டுக்குள் ராணுவத்திற்காக ஆராய்ச்சி செய்யப்போன தன் தந்தையை தேடிபோகிறார் , அதே போல் வேறு வேறு காரணங்களுக்காக டூரிஸ்டாகவும் சிலர் அந்தக் காட்டுக்குள் வருகின்றனர். அங்கே மரபணு மாற்றப்பட்ட அதிசக்தி வாய்ந்த…