இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ​​ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் இந்தப் படத்தில்…

Read More

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது ! இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ் திரையுலகின் நட்சத்திர…

Read More